குழந்தைகளைப் பெற்றெடுத்து, அச்செல்வங்களின் திருவிளை யாடல்களிலே திளைத்து இன்பங் காணுவோர் இப் பாட்டின் அருமைப்பாட்டை நன்கு உணர்வர். இதனைப் பாடி யவன், பாடும்போது தன்னைப் பாண்டியனாகவும் அறிவுடை நம்பி யாகவும் எண்ணியிருப்பின் இந்த அரிய பாடலை அவன் படைத் திருக்க இயலாது. நாமும் பெற்று இன்புற்றிருக்க இயலாது. அவன் குழந்தைகளோடு குழந்தையாகவே ஆகிவிடுகிறான். அங்கே குழந்தை புலவன் என்ற இரண்டு பொருள்களில்லை. ஒன்று என்ற தன்மையைத்தான் காண முடிகிறது. மேலைநாட்டுக் கவிஞன் ஒருவன் கூறுகின்றான் "நான் சாளரத்தின் வழியாகப் பறவைகளைப் பார்க்கும்போது நானும் பறவையாகி விடுகிறேன்" என்று. கவிஞன் பறவையாகவே மாறும்போது குழந்தையாக மாறுவதில் வியப் பென்ன? கவிகட்குக் "கூடுவிட்டுக் கூடு பாயும்" வித்தை தெரியும் போலும். சீறிய நங்கை இனி இளங்கோவைக் காண்போம். பாண்டியனிடம் வழக் காட விடுவதற்காகக் கண்ணகியை அழைத்துச் செல்கிறார் இளங்கோ. கண்ணகி வழக்காடுவது, இளங்கோவுக்காக அன்று. வழக்கு பாண்டியனுக்கும் கண்ணகிக்குந்தான். இளங்கோதான் கண்ணகிக் காக (காவியத்தில்) வாதாட வேண்டும்; ஆனால் அவர் கண்ணகி யைத்தான் பேசச் சொல்கிறார். கண்ணகியின் கணவன் கள்வன் எனப் பழி சுமத்தப்பட்டான்; பழியுடனமையாது கொலையும் செய்யப்பட்டு விட்டான். அவளுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வருகிறது; சீற்றம் பெருக்கெடுத்து வருகிறது. அந்த நிலையில் வாய் மலர் கிறாள்: "வாயிலோயே வாயிலோயே அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே" என்ற சொற்கள் கனலைக் கக்கிக்கொண்டு வெளி வருகின்றன. இந்தச் சொற்கள் வெளிவந்தனவோ இல்லையோ, வாதாட வந்த இளங்கோ வஞ்சிக்கே ஓடியிருப்பாரா என்று எண்ணத் தோன்று கிறது. அப்படிப் பேசுகிறாள் கண்ணகி. இளங்கோ பாடியதாயினும், படிக்கும்போது இளங்கோ பாடுவதாக நமக்குத் தோன்றவில்லை; |