பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

இனி அவர்தம் பாடல்களிலே ஓரிரு கருத்துகளை நோக்கு வோம். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிக்கும்போது அவர்தம் பாடல்கள் ஊழிக்காலப் பெரு நெருப்பைக் கக்கிக் கொண்டு வருவதைக் காணலாம். நம் பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்ற பெயருக்கே உரியவர் என்பதற்கும் மறுமலர்ச்சிக் கவிஞர் என மாநிலமே மதிக்கத்தக்கவர் என்பதற்கும் அவர் தம் பாடல் ஒவ் வொன்றும் சான்று பகரும்.

"ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
      உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்"

எனவும்,

"ஓடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவர் உணரப் பாநீ"

எனவும்,

"வலியோர் சிலர் எளியோர்தமை
   வதையே புரிகுவதா?
கொலைவாளினை எடடாமிகு
   கொடியோர் செயல் அறவே"

எனவும் பாடியுள்ள பாடற்பகுதிகளால் உணர்ச்சி வேகத்தையும் புதிய உலகைக் காணத் துடிதுடிக்கும் மறுமலர்ச்சிப் பேரார்வத் தையும் நம்மால் காண முடிகிறது. இவ்வாறு உணர்ச்சியூட்டியுங் கூடத் தன்னம்பிக்கையிழந்து தன்னாற்றலை அறியாது, சோம்பிக் கிடக்கும் மாந்தர்தனை நோக்கிப்

"பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
      திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா"

என்று வீரவுணர்ச்சியூட்டி வெளிக் கொணர்ந்து,

"மானிடம் என்றொரு வாளும் - அதை
      வசத்தில் அடைந்திட்ட உன்னிரு தோளும்