போலக் காய்ந்துவிட்டால் (இரத்தம் சுண்டிவிட்டால்) வெந்த அயத்தால் (அயபஸ்பம் என்ற மருந்தால்) ஆவதென்ன? அதனால் இந்தச் சரக்கை யார் சுமப்பார்கள்? நீர் எனக்குச் சிறந்த அகத்தை (இன்ப வீட்டை)த் தந்தால் இந்தப் பெரிய காயத்தை (உடம்பை)த் தேட மாட்டேன் என்று இவ் வகையில் பொருளுணர்த்தி இன்பந் தருகின்றன இந்தப் பலசரக்குச் சொற்கள். இவ்வாறு முன் கூறிய முறைப்படி, பலவகையான சொல் லழகுகள் அமைந்து, இன்பந் தருகின்ற கவிதைகள் நம் தமிழி லக்கியங்களிலே மிக்குக் கிடந்து, மலர்ந்து, மணம் வீசுவதை அவ்விலக்கியப் பூங்காவுள் புகப்பெற்றார் உணரலாகும். (15-11-1957-இல் திருச்சி வானொலியில் 'கவிதை இன்பம்' என்ற பேச்சுத் தொடரில் பேசப்பட்டது) |