பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்7

அரசியல் துறையில்

புதிய கல்விக் கொள்கையிலும் தமிழ் புறக்கணிக்கப்படு கிறது. உண்மை நிலையை ஆய்ந்து, நடுவு நிலைமையுடன் கல்விக் கொள்கை யை வகுத்து, அவ்வவர் தாய்மொழிக்கு ஆக்கந் தந்து, சிந்தனையில் ஒற்றுமையுணர்வு காண விழையாது, ஒரு மொழி யால் ஒருமைப் பாட்டை வளர்த்துவிடலாம் என எண்ணுகின்றனர். இவ்வெண்ணம் பன்மைப் பாட்டை வளர்க்குமே தவிர, ஒற்றுமை யுணர்வை வளர்க்காது. இக் கொள்கையில் அரசியல் நோக்கம் பொதிந்துளதே அன்றி அறிவு நோக்கம் காணப்படவில்லை. பல மொழிகள் வழங்கி வரும் ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மொழி கோலோச்ச விரும்பினால் சிறிதளவேனும் காணப்படும் ஒற்றுமையும் கருகி விடும் என்பதை உணராத அரசியலாலும் தமிழ் இரண்டாம் நிலை மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

மதத் துறையில்

தமிழ்நாட்டு மக்கள், வந்து புகுந்த இந்து மதம், இசுலாம் மதம், கிறித்துவ மதம் என்று பல்வேறு மதங்களைத் தழுவி வருகின்றனர். தாம் தாம் விரும்பிய மதங்களை ஏற்றுக்கொண்டு, ஒழுகி வருவது அவ்வவர்க்கமைந்த உரிமை. தமக்குச் சிறந்ததாகத் தோன்றிய ஒன்றை வழிபாட்டுக்காக ஏற்றுக் கொண்டதுடன் அமையாது, அவ்வந் நாட்டுக்குரிய மொழிகளுக்கும் அடிமைப் பட்டு விட்டனர். தமிழர் என்ற உணர்வை அடியோடு மறந்து விட்டனர் - இழந்து விட்டனர்.

இந்து மதம் புகுந்தோர் ஸ்ரீநிவாஸன், ஜகந்நாதன், விருத்த கிரீஸ்வரன், பங்கஜாக்ஷி, பிரேமலதா, புஷ்பவல்லி என்ற பெயர் களைச் சூட்டிக்கொண்டு, வடமொழிக்கு வால்பிடித்தனர். இசுலாம் மதத்தைச் சார்ந்தோர் ஹாஜா ஹமீது, இஸ்மாயில், ரஹீம், ஜமீலா, ரசீதா என்று அரபுமொழிக்கு மண்டியிட்டனர். கிறித்துவத்தை நம்பியோர் டேனியல், விக்டர், ஜார்ஜ், அனவுன் சியா, டெய்சி என்று ஆங்கிலப் பெயர்களுக்கு அடிமையாகினர். எம் மதம் பற்றினும் தமிழராக நின்று, தமிழ்ப் பெயர் களைச் சூட்டிக் கொள்வதால் வரும் குறையென்ன?

ஈண்டு உண்மை நிகழ்ச்சியொன்றைச் சுட்டிக் காட்டுவது பயன்தரும். மதுரையில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொறியியல் வல்லுநர் ஒருவர், ஈரான் ஈராக்கு முதலிய நாடுகளுக்குச் சுற்றுப்