70 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
தொண்டுக்கு இலக்கணம் தமிழ்க் குமுகாயத்தின் விடுதலைக்குப் பாடுபடும் எவரும் புரட்சித் தொண்டுதான் செய்தாதல் வேண்டும். அத் தொண்டு எத்தன்மையில் அமைதல் வேண்டும் என்று இலக்கணமே வகுத்துத் தருகிறார் பாவேந்தர். "தமக்கொரு தீமை என்று நற்றமிழர் எனை அழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன்நான் இனிதாம் என் ஆவி" "ஆன என் தமிழர் ஆட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன் ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக் குவப்புடன் நான் சேர்ப்பேன்" உண்மைத் தொண்டு புரிவோர், இனிதாகிய ஆவியும் தரக் கடமைப்படுதல் வேண்டும், அல்லல்கள் வரின் ஏற்றல் வேண்டும், ஊனுடல் கேட்பினும் உவப்புடன் சேர்த்தல் வேண்டும் என்பது பாவேந்தரின் கொள்கை. தொண்டு புரிவதால் தொண்டர் வாழ்க் கையில் துயர் சூழ்கிறது; தாங்க முடியாத அளவு சோதனைகள் நிகழ்கின்றன. அவ்வமையம் மாற்றார் பணம், பதவி, பட்டம் முதலியன காட்டி ஆர்வ மொழிகள் கூறி, அழைப்பு விடுக்கின்றனர். உடனே ஓடிவிடுவது தொண்டுக் கழகா? என வினவின், "எமை நத்துவாயென்று எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்" என்று முகத்தில் அறைந்தாற் போற் கூறிவிடுகிறார். எத்துணைக் கோடியென்று இயம்பவில்லை. கோடி வெண்பொன்னா? செம் பொன்னா? அதுவும் கூற வில்லை. பொதுவாகக் 'கோடி' என்று மட்டுங் கூறுகிறது பாடல். எத்துணைக் கோடி எனினும் சரி, அது வெண்பொன்னாகினும் சரி, செம்பொன்னாகினும் சரி, "தொடேன்" என மறுத்துவிடுகிறார். கோடி தருவதாகச் சொல் லளவில் நில்லாது, 'இட்டு அழைத்தாலும்' என்று கூறுகிறார். அஃதாவது எதிரில் கொட்டி வைத்துக்கொண்டு அழைத்தாலும் தொடேன் என்ற |