பக்கம் எண் :

80கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

கைம்பெண்களின் தொகையைக் குறைக்க வழியாகும் என்னுங் கருத்துப்படக் குறிப்பிடுகிறார்.

காந்தியடிகளின் இக் கருத்தைப் பாரதியார் வன்மையாக மறுக்கிறார், அவர் எழுதுவதாவது: "ஸ்திரீவிதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், ஸ்ரீமான் காந்தி புருஷ விதவைகளின் தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார்" எனக் கிண்டல் செய்துவிட்டு, 'எவ்வகையாலே நோக்குமிடத்தும் ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம் நியாய விரோதமானது; சாத்தியப்படாதது; பயனற்றது" என மறுத்துவிடுகிறார் கவிஞர்.

மேலும் பாரதியார், "இந்தியாவில் சிற்சில ஜாதியாரைத் தவிர மற்றப்படியுள்ளோர், நாகரிகத் தேசத்தார் எல்லாரும் செய்கிறபடி, விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரைப் புனர் விவாகம் செய்துகொள்ளலாம்" என்று "இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை' என்ற கட்டுரையில் உறுதிபடக் கூறுகிறார். இவ்வாறு துணிந்து கூறிய பாரதியார் தமது பாடலில் இக் கொடுமையைச் சாடாது விட்டதுதான் வியப்பாக வுள்ளது!

எனினும் பாரதியின் வழித்தோன்றலாகிய பாரதிதாசன், பாரதியார் விட்ட குறையைத் தொட்டு நிறைவு செய்துவிடுகிறார். ஆனால், பாரதிதாசன் வழிவந்த கவிஞர் கூட்டம் அந்த நெறியில் தொடர்ந்து செல்வதைக் காண இயலவில்லை.

பாவேந்தர் பாரதிதாசன் கைம்மையைப் பற்றிப் பாடும் பொழுது அப் பெண்களின் நிலைக்கு இரங்குகின்றார், உணர்ச்சி வயப்படுகின்றார்; அதற்கு அரண்களாக நிற்பவற்றை, தடைகளாக இருப்பவற்றை வெகுண்டெழுந்து சாடுகின்றார்; கைம்மைப் பெண்களின் சார்பில் வழக்கறிஞராக நின்று வாதிடுகின்றார்; துணிந்தெழுந்து மறுமணமும் செய்துவைக்கின்றார்.

"கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே - இங்கு
      வேரிற் பழுத்த பலா - மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே - குளிர்
      வடிகின்ற வட்ட நிலா"

இஃது ஓர் ஆண் மகனை விளித்துக் கூறப்பட்டதாக இருப்பினும் குமுகாயத்தை நோக்கிக் கூறப்பட்டதாகவே கொள்ளுதல் வேண்டும் 'ஏ,