பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்95

முதுமையிலும் தாம் இளமையோடிருப்பதற்குக் காரண மாகப் பிசிராந்தையார், நல்ல சமுதாயச் சூழல் என்றார். அதுமட்டு மின்றி நற்குண நற்செய்கைகளால் மேம்பட்ட என் மனைவியும் என் மக்களும் அறிவுநிரம்பப் பெற்றவர்கள் என்று குடும்ப அமைப்பும் காரணம் என்று கூறுகின்றார்.

நல்ல அரசன், நல்ல குடும்பம், நல்ல சமுதாயம், அதனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அம் மகிழ்ச்சிப் பெருக் கால் இளமையோடிருக்கிறேன் எனக் கூறுகிறார்.

இவ்வாறு பண்டை நாளிற் பெருகிக் கிடந்த அரசியல் நாகரிகத்தையும் மன்பதை நாகரிகத்தையும் குடும்ப நாகரிகத் தையும் நம் பண்டைய இலக்கியங்கள் எடுத்துக்காட்டுவதால் வரலாற்றாசிரியர்கள் தமிழ் நாகரிகம் உலக நாகரிகத்தின் தொட்டில் என்று கூறுகின்றனர்.