பக்கம் எண் :

104கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

ஐயா, அவர்களின் சகோதரிகள் இருவர் ஆக மூன்று குழந்தைகளையும் கண்போலக் காத்து வந்தார். தினம் வரும் விருந்தினர், சுற்றத்தாரை வரவேற்று, வேண்டியவர்கட்கு வேண்டியதை அளித்து, விருந்
தோம்பல் பண்பிலும் தலை சிறந்து விளங்கினார்; கணவர் மிகச் சின்ன வயதிலேயே காலமான பின்னர், அதையும் தாங்கி, கண்டிப்புடனும், திட்டத்துடனும் உறுதியோடும் செயல் பட்டுக் குழந்தைகளை மிக மிக நல்ல முறையில் மேன்மையாகக் கொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்ததால் மிக நல்ல முறையில் வளர்க்கப்பட்டவர்கள் எங்கள் ஐயா. அந்த நாளிலேயே மிகச் சின்ன வயதிலேயே வெள்ளையனைத் தோற்கடிக்கும் ஆங்கில உச்சரிப் போடும், தங்கு தடையின்றி இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசுவார்கள்.

எங்கள் ஐயா அவர்களின் இல்லத்தில் "இன்ப மாளிகை" யில் நாங்கள் பேரன், பேத்திகள் வாழ்ந்த காலம், எங்கள் வாழ்க்கையின் பொற்காலம், மகிழ்ச்சியான, உற்சாகமான காலம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் திட்டமிட்டுச் செயற்படும் விதம் கற்றுக் கொடுத்து, பொறுப்புகளையும் அவரவர் வேலை கடமை களையும், தவறாது செய்யப் பழக்கினார். அதே நேரம் சிறிய தவறு செய்தாலும், கண்டிப் போடு கூறி, பாசம் அன்பு கலந்து எங்கட்கு அறவுரை கூறி, எல்லாவற்றிற்கும், எல்லாச் சூழ்நிலைக்கும் ஏற்ப எங்களை வளர்த்தார்.

எங்கள் ஐயா அவர்களின் கண் பார்வையைப் பார்த்தாலே ஒரு ஒளிவீசும் தன்மையும், தீட்சண்யமும், புலப்படும். சிறு வயதிலேயே நாங்கள் அதைப் புரிந்து கொண்டோம். பழங் காலக் குருகுல வாசம் போல நாங்கள் பயிற்றுவிக்கப் பட்டோம் நாங்கள் அனைவரும் பேரன், பேத்திகள், எங்கள் ஐயாவி னாலும் ஆயா மஞ்சுளாபாய் வை. சு. அவர்களினாலும் மிக மிக நல்ல சுறுசுறுப்பானவர்களாகவும் அறிவாளர்களாகவும் தன் தன் வேலைகளைத் தானே செய்பவர் களாகவும் வளர்க்கப்பட்டோம். அதிகாலை 5 மணிக்கெழும் பழக்கமும், பாரதியார் பாடல்கள் தினம் மூன்று தடவை வீதம் பூராவும் பாடவைத்து, தேகப் பயிற்சியிலிருந்து இரவு 9.00 மணிக்குத் துயிலப் போகும் வரை எல்லாம் திட்டப்படி நடக்கும். கணப்பொழுதும் சோர்வு வராது. அப்படி எல்லாம் மிக மிக நல்லமுறையில் எங்களை வளர்த்தனர்.