18 கலங்காத நெஞ்சம் கலங்கியது சுசீலா சுப்பிரமணியம் (மகள் வழிப் பேர்த்தியாகிய சுசீலா, சண் முகனாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் தாம் அறிந்தவற்றை உருக்கமுடன் கட்டுரையாக்கித் தந்துள்ளார். நம்மையும் உருக வைக்கிறார்.) முப்பெரும் வேந்தர் காலத்திலிருந்தே மதிப்பும் பெருமையும் பெற்ற தன வணிகர் குலத்தில் செல்வச் செழிப்பு மிக்க, படிப்பாற்றல் மிக்க குடும்பத்தில் சுப்பிரமணியன் செட்டியார் அவர்கட்கும், அழகம்மை ஆச்சி அவர்கட்கும் பிறந்த ஒரே ஆண்மகன் எங்கள் ஐயா. வயி. சு. சண்முகம் செட்டியார் அவர்கள் ஆவார். எங்கள் ஐயாவைப் பற்றித் தெரிந்து கொள்ளு முன் அவர்களின வம்சா வழியை நான் தெரிந்து கொண்டதை எழுத ஆசைப்படுகிறேன். எங்கள் ஐயாவின் தந்தையார் சுப்பிரமணியன் செட்டியாரவர்கள் தாய் நாட்டிலும், மலாயா நாட்டிலும் புகழ் பெற்றவர்கள். மிகுந்த திறமையும், கெட்டிக்காரத் தனமும், கடின உழைப்பும், நேர்மையும், தர்ம சிந்தனையும், பரோ பகாரக் குணமும், பாசமும் உள்ளவர்கள். சின்ன வயதிலேயே கடல் கடந்து மலாயா நாடு சென்று சிறப்பான முறையில் அங்குத் தொழில் புரிந்து நன்கு பொருளீட்டி, அங்குத் தர்மங்கள் பலப்பல செய்து, மலாயா நாட்டில் கோவிலும் கட்டிய வர்கள். மலாயா அரசால் பாராட்டப் பட்டவர்கள். எங்கள் ஐயா அவர்களின் தந்தையார் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பெருமையுடன் எடுத்துக்காட்டாக வாழ்ந்த வர்கள். அவர்களின் துணைவியார் - எங்கள் ஐயாவின் தாயாரவர்கள் கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்ந்தவர். வாழ்நாளில் முக்காற் பகுதி கணவர் மலாயா நாட்டில் இருந்த போதும் அடிக்கடி தாய் நாடு வந்து உடன் திரும்பி விடும் நிலையிலும் அந்தப் பெரிய குடும்பத்தைக் கட்டிக் காத்து, கணப் பொழுதும், அயாரது, எங்கள் |