102 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
கோபப்பட்டு, “வரவேற்க நாங்கள் இருக்கி றோம்; நீ வணக்கம் என்று கூற வேண்டும்” என்றார்கள். சாப்பிடுகையில் எதையுமே வீணாக்கக் கூடாது என்பார்கள். சிறு வயதில் கீரையைப் பார்த்தால், விளக்கெண்ணெய் சாப்பிடப் போவதைப் போல் சங்கடமாக இருக்கும். ஐயாவை ஏமாற்றி விட்டு, சாப்பிடாமல் தப்பிக்கவே முடியாது. ஐயா அவர்களின் கல்வி ஆர்வத்தினால்தான் வசதியில்லாத நிலையிலும் நாங்கள் படிக்க முடிந்தது. அதே சமயம் நாங்கள் தற்பெருமை கொள்ளுதல் கூடாது என்பதற்காகக் “கற்றது கைம் மண்ணளவு” என்பது ஒளவையார் வாக்கு என்பார்கள். பெண் குழந்தைக்குப் பொறுமை மிக வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். யாராவது, நம் மனம் வருந்தும்படி செய்து விட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. நாமும் திருப்பிச் செய்தால் தான் அதன் வேதனை அவர்கட்கும் தெரியும் என்றால், உடனே ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்ற திருக்குறளை மேற்கோள் காண்பிப் பார்கள். எங்கள் ஐயா என்று கூறியவுடன், நினைவுக்கு வருவது அவர் களின் கம்பீரத் தோற்றமே. சோர்வின்மைக்கும், தைரியத் திற்கும், விடா முயற்சிக்கும், எடுத்துக் காட்டாக வாழ்ந்த அவர்களின் நினைவு, என்றும் எங்கள் மனத்தில் நிற்கும். |