உறுதுணையாகத் தந்தையாரவர்கள் இருந்திருக் கிறார்கள். அந்த நன்றியை அவர் ஒரு போதும் மறந்ததில்லை. ஒரு தம்பி அல்லது மகனைப் போலத் தந்தையாரவர்களிடம் நடந்து கொள்ளுவார்கள். தந்தையாருக்குப் பொருள் மெலிவு ஏற்பட்டு விட்டது. ஒரு சமயம் கேசுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டாதாம். நிலை மையைத் தந்தையாரவர்கள் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார்கள். தந்தையாரவர்களே எதிர்பாராவிதம் தந்தி மணியார்டரில் சில ஆயிரம் அனுப்பி வைத்து விட்டு, சிறிதுநாளில் மேற்கொண்டு பணம் அனுப்பி வைக்கிறேன் என்று எழுதி, அதன்படி அவர்களின் மனைவியின் நகைகளை (அவர் சீனப் பெண்மணி) பேங்கில் அடமானம் வைத்து மறுபடியும் பணம் டிராப்ட் மூலம் கிடைக்கச் செய்தார்கள். பிறகு இந்தப் பணங்களை என் அண்ணன் சிங்கப்பூரில் கொடுத்து விட்டார்கள். தந்தையாரவர்களின் பிள்ளைகள் என்பதினால் எனது அண்ணன் அவர்களிடமும் என்னிடமும் அளவற்ற பிரியத் துடன் நடந்து கொள்வார்கள். தந்தையாரவர்கள் இறந்த பின்னரும் எனக்கும், என் அண்ணனவர் கட்கும் ஒரு தந்தைபோல (நாங்கள் சிங்கப்பூரில் இருந்த பொழுது) பலமாகவும், உறுதணையாகவும் இருந்து வந்தார்கள். அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் அருமைத் துணைவியாரும் என்னிடம் (அண்ணன் அவர்கள் காலமாகி விட்டார்கள்) அவர்கள் உயிருடன் இருந்தவரை நல்ல அன்பு, ஆதரவுடன் இருந்துவந்தார்கள், அந்தக் காலத்தில் சிங்கப்பூரில், மலேசியாவில் தமிழர்களின் நலன், வளர்ச்சிக் காக, "முன்னேற்றம்" பத்திரிகை மூலமும், "தமிழ் முரசு" பத்திரிகையின் மூலமும், பிரசங்கங்கள் மூலமும் "முன்னேற்றம்" பத்திரிகை உரிமையாளர் திரு. கோவிந்தசாமி பிள்ளை அவர்களும் தந்தையாரவர்களும், திரு. கோ. சாரங்கபாணி ஐயா அவர்களும் இன்னும் சிலரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வீண் போக வில்லை. விதைத்த விதை மரமாகிப் பலன் தந்து வருகிறது. எங்கள் தாயார் எங்களின் தாயார் அவர்கள் அன்புள்ளம் கொண்டவர்கள். பெண்கள் எழுத்தறிவு பெறாத காலம். அவர்களின் 9-ஆவது வயதில் அவர்கட்குத் திருமணம் செய்யப்பட்டதாம். ஒரு சில மாதங்கள் தந்தையாரவர்கட்கு இளையவர்களாம். தந்தையார் அவர்கள் மனம் போலத்தான், எதையும் செய்வார்களாம். அவர்கள் சொல்லுக்கு மாறாக நடந்ததில்லையாம். |