118 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
ரூபாய் கொடுத்து ஒருவன் வாங்கினால் அவனைப் பற்றி என்ன நினைப்பீர்கள்" என்று கேட்டார்கள். அதற்கு "மதிப்புத் தெரியாதவன், முட்டாள் என்று நினைப்பேன்" என்று சீவா ஐயா கூற, தந்தையார் "அப்படியானால் நாமிருவர் மட்டும் தானே இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம். பல நூறு பேர், ஆயிரம் பேர் கூடி இருக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவது போல ஏன் இவ்வளவு சத்தம் போட்டுப் பேசுகிறீர்கள்? உங்கள் உடல் நலத்தை இது எத்தனை தரம் பாதித்து உள்ளது. கூட்டத்தில் பேசும் பொழுது இருமல், தொண்டைச் சிரமத்துடன் பேச வைத்து விடுகிற தல்லவா? இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும்" என்று அன்பு கலந்த கண்டிப்புடன் கூற, சீவா ஐயா ஒரு குழந்தை போலச் சிரித்துக் கொண்டு பவ்யமாகத் தலையசைத்து ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி - காட்சி மறக்க முடியாத ஒன்று. இந்தியாவிற்குள் வரத் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், வங்காளத்திலிருந்தும், கேரளாவிலுமிருந்தும் இவர் (சீவா ஐயா) கைக்கு வந்து சேரும். அவைகளை இங்கு வைத்திருந்து படித்தும், பிறகு தேவைக்கு ஏற்ப எடுத்தும் செல்வார்கள். தந்தையாரவர்களின் பணநிலை சுருங்கிய பின்னர் இயக்கங் களில் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையினர் ஒதுங்கினர். ஆனால் சீவா ஐயா அவர்களோ முன்னைக்காட்டிலும் அன்பு மிகுதியுடன் அப்பகுதிக்குப் பிரசாரத்துக்கு வரும் பொதெல்லாம் எத்துணைச் சிரமப்பட்டும் தந்தையாரவர்கள் உயிருடன் இருந்த வரை கானாடுகாத்தான் வந்து இவர்களைப் பார்க்காமல் சென்றதில்லை. இருவருக்கும் உள்ள நட்பு மிக மிக ஆழமானது. அசைக்க முடியாதது. ஒருமுறை கூடக் கீறல் கண்ட தில்லை. இருவரும் ஒருவிதப் பாச உணர்வில் கட்டுப் பட்டிருந் தனர் என்றே கூறலாம். ஆரம்ப காலம் முதல் தந்தையாரவர்கட்குக் கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடு, ஆனால் அதே சமயத்தில் பலாத்கார வழியில் நம்பிக்கையும் இல்லை. பிடித்தமும் இல்லை. கோ. சாரங்கபாணி தொடர்பு சிங்கப்பூரில், "தமிழ் முரசு" பத்திரிகையின் உரிமையாளர், ஆசிரியர் உயர்திரு கோ. சாரங்கபாணி ஐயா அவர்களும், தந்தை யாரவர்களிடம் எல்லையற்ற அன்பு பூண்டிருந்தவர்கள். திரு. கோ. சா. ஐயா அவர்கள் சிறு வயதில் சிங்கப்பூர் வந்திருந்த பொழுது அவர்களின் வளர்ச்சி முன்னேற்றத்துக்கு ஒரு வழி காட்டியாக, |