124 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
ஆனால் தந்தையோ கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை. தன் ஒரே மகளுக்குப் பண வசதியுள்ள இடம் அமையாவிட்டாலும் பரவாயில்லை. தன் கொள்கைக்கு ஒத்து வருகிற ஓர் படித்த பையனாகப் பார்த்துத் திருமணம் செய்து விடுவோம். விவகாரத்தில் உள்ள சொத்துகள் தனக்கு அனு கூலமாகக் கிடைத்து விடும். உண்மையான உரிமை இவர் கட்குத் தான். அப்படிப் பணம் வந்தவுடன், ஆண் மகனுக்கும், பெண் மகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விடுவோம். தன் மகளுக்கும் இதனால் வசதி கிடைத்து விடும் என்று எண்ணி, அதன்படியே இந்த நிபந்தனைகளுக்குச் சம்மதித்த குடும்பத்தில் திருமணம் செய்விக்கப்பட்டது. இத்திருமணம் அந்தக் காலத்தில் 1935-ல் செட்டி நாட்டையே ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. பெரிய பரபரப்பை, பெரிய எதிர்ப்பை உண்டாக்கிய ஒன்று. அந்தக் காலத்தில் செட்டிய வீட்டில் திருமணம் 6 நாள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்கு நடைபெறும். பெண்ணுடைய ஊருக்கு மாப் பிள்ளை வீட்டார், உறவினர் பங்காளிகளுடன் வருவர். அவர்களுக் கென்று பெண்ணுடைய ஊரில் "மாப்பிள்ளை வீடு" என்று வாடகைக்கு அமர்த்தி இருப்பர். இதைத் தந்தையாரவர்கள் மாற்றி விட்டார்கள். கானாடு காத்தானில் உள்ள இவர்களின் மாளிகையிலேயே மாப் பிள்ளை வீட்டாரும் வந்து இறங்கினார். 6 நாள் நடைபெறும் திருமணத்தை 3 நாளாக்கினார்கள். சீர்திருத்த முறையில் புது மாதிரியில் செய்வதற்குப் பங்காளி களின் அனுமதி - சம்மதம் கேட்க விரும்பவில்லை. பங்காளி வீடுகள் அத்தனையும் ராயபுரத்தில் உள்ளன. திருமணத்திற்கு 2 நாள் முன்னாடித்தான் பங்காளிகளுக்கு அழைப்பு விடுக்கும் வழக்கப்படி இவர்களும் செய்தார்கள். "என் பெண்ணுக்கு என் விருப்பப்படி திருமணம் செய்வதற்கு இவர்கள்அனுமதி கேட்க அவசியம் என்ன" என்ற கருத்தில் முதலில் போய்ச் சம்மதம் கேட்கவில்லை. ஆனால் காரைக் குடியில் மாப்பிள்ளை வீட்டார் பங்காளிகளை முதலில் பார்த்துப் பேசிச் சம்மதம் பெற்றுவிட்டார்கள். ஆனால் பங்காளிகள் 6 நாள் திருமணத்தை 3 நாளாகக் குறைக்கச் சம்மதிக்கவில்லையாம். இதனால் மாப்பிள்ளை வீட்டார் "கானாடுகாத்தானில் 3 நாள் திருமணம் நடக்கிறபடி நடக்கட்டும். காரைக்குடியில் பெண் |