அழைத்த வீட்டில் 3 நாள் சாப்பாடுகள் வைத்துக் கொள்ளலாம்" என்று கூறப் பங்காளிகள் சம்மதம் தெரிவித்துக் கானாடு காத்தானில் நடைபெற்ற திருமணத்துக்கு வந்துவிட்டனர். ஆனால் பெண் வீட்டிற்கு முதல் நாள் வரும் பங்காளிகளில் இரு வீட்டார் மட்டும் முன்னாடியே வந்து விட்டனர். பங்காளிகளில் ஒரு முக்கியஸ்தரும் தந்தையாரும் எப்போதுமே ஒருவருக்கொருவர் முரணிக் கொண்டே இருப்பர். அதனால் இதை ஒரு காரணமாக வைத்து ராயபுரத்தில் அத்துணை பங்காளிகளையும் "கானாடு காத்தானுக்குத் திருமணத்துக்குச் செல்லக் கூடாது. நம்மை எல்லாம் (இவரை) மதிக்காமல், சம்மதம் பெறாமல் செட்டியவீட்டுப் பழக்கத்தையே தகர்த்து, திருப்பூட்டுச் சடங்கு செய்யாமல் மாப் பிள்ளையே பெண் கழுத்தில் தாலி கட்டுவதாம். ஐயர் வர மாட்டாராம். அதனால் இந்தக் கலியாணத்துக்கு போகக்கூடாது" என்று கூறித் தடுத்து விட்டார்கள். (ஆனால் ஏற்கனவே கோவிலுக்குப் பாக்கு வைத்தபடி திருமணத்தன்று கோயில்மாலை வந்து விட்டது.' பங்காளிகள் வராததைத் தந்தையார் பொருட்படுத்த வில்லை. செட்டிநாட்டில் சீர்திருத்தத்தில் அக்கறை உள்ள தனவணிக இளைஞர்கள் அவர்கள் மனைவிகளுடன் பல ஊர்களில் இருந்து வந்து குழுமி விட்டனர். தந்தையாரவர் களிடம் அன்பும் மதிப்பும் வைத்திருந்த அழைப்பு அனுப்பி யிருந்த பல தனவணிக சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்களும் அழைப்பு இல்லாத செட்டியார்களும் கூட, "எப்படி இத் திருமணம் நடைபெறுகிறது பார்ப்போம்" என்று எண்ணி அவர்களும் வந்து விட்டனர். திருமணத்தன்று பங்காளிகள் கூட்டத்தை விட, 2, 3 மடங்கு கூட்டம் கூடி விட்டது. சர்.பி.டி. ராசன் (அப்போதைய கல்வி மந்திரி) அவர்கள் தலைமையில் பெரியார் ஈ.வெ.ரா. முன்னிலையில் எங்கள் திருமணம் நடை பெற்றது. முதல் நாளே திருமணம் பதிவு செய்தாச்சு. எங்கள் திருமணத்துக்குப் பிறகு ஒருவாரம் பத்து நாளுக்குள் இதே முறையில் அமராவதி புதூரில் திரு. பிச்சப்பா - சுப்பிரமணியம் அவர்களின் இரண்டாவது புதல்வியின் திருமணமும் சீர்திருத்த முறையில் நடைபெற்றது. வைதீகப் பெரியவர்கள் ஆத்திரம் கொண்டு ஏற்கனவே கோவிலுக்குப் பாக்கு வைத்தும் கோவில் மாலை அமராவதி புதூர் திருமணத்துக்கு வரவிடாது தடுத்து விட்டனர். "முன்னாடி நடந்த திருமணத்தில் பெண் வீட்டுக்கும் |