126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
மாப்பிள்ளை வீட்டுக்கும் கோவில் மாலை வந்துள்ள நிலையில் எங்கள் வீட்டுத் திருமணத்துக்கு மட்டும் வராமல் எப்படித் தடுக்கலாம்?" என்று திரு. பிச்சப்பா சுப்பிரமணியமும் அவர்களின் பங்காளி களும் கேட்க, எல்லாக் கோவில்களையும் சேர்ந்த தனவணிகர் களில் வைதிகக் கோஷ்டி சீர்திருத்த இளைஞர்கள் கோஷ்டி என இரு பிரிவாகக் கோவில் மாலைப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்கள். இது இச்சமூகம் முழுமையும் ஒரு கலக்குக் கலக்கி விட்டது. எந்தச் செட்டிய வீட்டிலும் பல மாதங்கள் இப்பேச்சே அடிபட்டது. "சங்கத்துக்கலியாணம் இது" என்று ஒரு பெயரையே வைத்து விட்டனர். ஆரம்பத்திலிருந்தே எங்கள் தந்தையாரவர்களிடம் திரு. ராம. சுப்பையா அண்ணன் அவர்கள், ஒரு தந்தையிடம் பழகுவது போல் பழகி வந்தவர்கள். எங்கள் திருமண வேலையிலும் மற்றும் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சி களிலும் முன்னின்று முக்கிய பங்கெடுத்துச் சளைக்காது, பம்பரம் போல் செயலாற்றிப் பங்கு கொள்வார்கள். பிற் காலத்தில் என் அண்ணன் மகள் லெட்சுமி என்ற கமலாவை இராம. சுப்பையா அவர்களின் மூத்தமகன் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்குச் (சினிமா டைரக்டர்) சீர்திருத்த முறையிலேயே திருமணம் செய்து கொடுத்து மகிழ்ந்தார்கள். தந்தையார். செட்டிய வீட்டுப் பெண்கள் காலில் செருப்புப் போட மாட்டார்கள். முதன் முதலில் இதைச் செய்ததும் இந்த வீட்டுப் பெண்கள்தாம். அன்னையார் மறைவு தந்தையார் அவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் பொழுது தாயாரவர் களுக்கு நோய் கூடிவிட்டது. உள்ளூர்ச் சட்டைக் கார லேடி டாக்டர் மிக நிபுணத்துவம் வாய்ந்தவர். மாதம் இருமுறை வந்து பார்த்துச் செல்லுவார். உடல் நிலையில் மாற்றம் நேர்ந்தால் தகவல் கொடுத்தால் உடன் வந்து கவனிப்பார். இப்படி ஒரு முறை டாக்டர் வந்திருந்தபோது புதல்வியாகிய என்னிடம் "அம்மா இனி அதிக நாள் இருக்க மாட்டார்கள். ஒரு மாதத்துக்குள் எதுவும் நேரலாம். இதை இன்றே அப்பாவுக்குக் கடிதம் எழுதிவிடு" என்று கூறிச் சென்றார். உடனே அதன்படி எழுதினேன். அந்தச் சமயம் சிங்கப்பூரில் கேஸ் விசாரணைச் சமயம், அதற்கு ஏற்பாடு செய்து வைத்து வரவேண்டும். அப்பொழுது விமானப் பிரயாணம் இல்லாத காலம். கப்பல் பயணம் 9 நாள், ரயில் பயணம் |