பக்கம் எண் :

128கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

இதர சாமான்களை வீட்டில் அப்படியே வைத்துவிட்டு எதிலும் கலந்து கொள்ளாமல் சாப்பிடாமல் கோபம், வேதனை யுடன் சென்று விட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் சேர்த்துச் சமைத்த சாப்பாடு எல்லாம் வீணாகி விட்டது. பூக்களினால் அலங்கரிக்கப்பட்ட காரில் பிரேதம் எடுத்துச் செல்லப்பட்டது. இதுவும் அச்சமூகத்தை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. பல மாதங்கள் பல ஊரிலும், வீட்டிலும் இதே பேச்சு.

தந்தையின் கல்வி நிலை

தந்தையாருடைய பள்ளிப் படிப்பு அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்பு வரைதானாம். இவர்களின் சொந்த முயற்சி யினாலும், ஆர்வத்தினாலும் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் சிங்கப்பூர், மலேயாவில் இருக்கும் பொழுது ஆங்கிலம் கற்றுக் கொண்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் வல்லமை பெற்றிருந் தார்கள். தேவையும், ஆர்வமும் இருந்தால் முடியாதது என்ன? இவர்களுடைய சிங்கப்பூர் லாயர் ஒரு வெள்ளைக்காரர். சட்டத்தில் மகா வல்லுநர். இவருடன் தந்தையார் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார்களாம்.

ஒரு சமயம் கோர்ட்டில் விசாரணை நடக்கும் பொழுது நீதிபதி முன்பு லாயர் பேசிக் கொண்டிருந்த பொழுது, தந்தையார் இவரின் லாயரிடம் சில சட்ட நுணுக்கங்களை நினைவுபடுத்திக் கூறினார் களாம். இதை நீதிபதி கவனித்து விட்டார். அந்த சிங்கப்பூர் ஹைகோர்ட் தீர்ப்பில் "வை.சு. சண்முகம், அவரின் வயதுக்கு மேல் திறமைசாலி" என்று ஓர்இடத்தில் கூறியுள்ளார். எதிரிகள் செய்த அபாரமான மோசடிகளை எல்லாம் அம்பலமாக்கி, ஆணித்தர மாகத் தீர்ப்பு எழுதி, வை.சு. அவர்களுக்கு முழு வெற்றி கிடைக்கும் வகையில் தீர்ப்பளித்தார்.

தந்தையார் இயல்புகள்

தமிழ் மொழி வளர்ச்சியில் ஆர்வம் மிக்கவர் எம் தந்தையார். தமிழ்க் கவிஞர்கள், தமிழ் அறிஞர்களிடம் மிகுந்த ஈடுபாடு, பற்றுள்ளம் கொண்டவர்கள். இவர்களின் துன்பநிலை, அறிந்தால் தந்தையார் மனம் கொதித்துப் பேசுவார்கள்; மனம் நைவார்கள். இயன்ற உதவிகளை வலியச் சென்று தம் கடமை யாகக் கருதிச் செய்வார்கள். இன்ப மாளிகைக்கும், பிறகு வசித்த ஒரு பழைய வீட்டிற்கும் சித்தர்களும் வந்து செல்வ துண்டு. மதுரை அருகில் ஒரு