பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்129

கிராமத்திலிருந்து இரண்டு சித்தர்கள், வருவதுண்டு. இவ்விருவரும் உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் அதற்குள்ள நரம்பு களைக் கணித்து அதைப் பிடித்து நீவி விட்டு அந்த நோயை அகற்றி விடக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள். அவருள் ஒருவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. முகத்தில் ஒரு கடுமையான தோற்றம். நல்ல உயரமாக இருப்பார். முதல் நாள் வந்து, அன்றோ மறுநாளோ சென்று விடுவார்.

இன்னொருவர் செல்லச்சாமி என்பவர். இவர் பல் விளக்க மாட்டார். எப்பொழுதும் வாயில் வெற்றிலை, புகையிலை அடக்கி இருப்பார். யாரிடமும் ஒரு குழந்தை போலக் குழந்தைப் பேச்சாகவே பேசுவார். செட்டிநாட்டில் மிகப் பெரிய செல்வர் வீடாக இருக் கட்டும், அங்கும் சென்று இதமாக ஓரிரு வார்த்தை குழந்தை பேசுவது போலப் பேசிவிட்டு வருவார். நடுத்தர வீட்டுக்கும் வருவார். தீண்டப் படாதவர்கள் என்று அக்காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த சாதியினரின் வீட்டுக்கும் சென்று வருவார். ஆனால் இவர் தந்தையார் வீட்டுக்குத்தான் அதிகம் வருவார். அழுக்கு வேட்டி கட்டியிருப்பார். இதைப் பார்த்து நல்ல வேட்டியை தந்தையார் கொடுப்பார்கள்.

வாழைப் பட்டையில் மூக்குப் பொடி வைத்து இருப்பார். மடியில் சொருகி வைத்திருப்பதினால் அதை எடுத்துப் பிரிக்கும் போது கொட்டி விடும். கிழிந்து விடும். இதை உணர்ந்த தந்தையார், 4, 5, மூக்குப்பொடி டப்பா வெள்ளியில் செய்து வாங்கி ஒன்றைக் கொடுப்பார்கள். இவர் எளிய மக்கள் வசிக்கும் பகுதிக்குத் தவறாது செல்வார். அங்கு "சாமி எனக்கு வேட்டி கிழிந்து விட்டது" என்று கூற வேண்டியதுதான் தாமதம், உடனேயே இவருக்கு யாரும் கொடுத்துள்ள நல்ல வேட்டியை உரிந்து கொடுத்து விட்டு அந்தப் பழைய வேட்டியை இவர் வாங்கிக் கட்டிக் கொண்டு விடுவார். பிறகு அடுத்த நாளே, அந்த ஊரிலோ அடுத்த ஊரிலோ இவர் விரும்பும் வீட்டுக்குச் செல்லுவார். போன உடனேயே இவர் கோலத்தை அந்த வீட்டார் கண்டு வேறு நல்ல வேட்டி கொடுத்து விடுவர்.

மூக்குப்பொடி டப்பாவோ வேட்டியோ இவரிடம் தங்காது. இந்த நிலை அறிந்த பிறகு மூக்குப்bடி டப்பா கொடுப்பதைத் தந்தையாரவர்கள் நிறுத்தி விட்டார்கள். இவர் காசைக் கையில்