பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்131

வந்து மகாத்மா காந்தியடிகளின் கடிதங்கள், பாரதியாரின் கடிதங்கள், கவிதைகள் முதலியவற்றை வெளியிடக் கருதிக் கேட்டவர்கள் பலர், இன்னும் திரு. சோம. லெ. போன்றவர்கள் கானாடுகாத்தானுக்கு வந்து, அன்றைய செட்டி நாடு இருந்த நிலையில் சமூகத்துக்கும், காங்கிரஸ், சுயமரியாதை இயக்கங்களுக்கும் நீங்கள் ஆற்றிய சேவை விவரங்களையும் தாருங்கள் கூறுங்கள் என்று எவ்வளவோ கேட்டும் பெறமுடியாது வருத்தத்துடன் சென்றுள்ளனர். நானே ஒரு முறை கேட்டுப் பார்த்தேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் "இந்தக் கடிதங்கள், கவிதைகள் எல்லாம் அந்தக் காலத்தில் நானிருந்த நிலையை வைத்து எழுதியவை. இப்பொழுதுள்ள நிலையில் வெளியிட விரும்பவில்லை. நல்ல காலம் நிச்சயம் வரும். அப்பொழுது வெளியிடலாம்." என்று கூறிவிட்டார்கள். கடைசியாக எப்படியோ தந்தையாரவர் கட்குத் தெரியாது எனது சிற்றன்னையார் உதவியுடன் கவிஅரசர் முடியரசனார் அவர்கள் அப்பாடலை எடுத்து அவர்கள் வெளியிட்ட "எழில்" பத்திரிகையில் இதனை வெளிவரச் செய்து விட்டார்.

ஒரு பொங்கல் நாளன்று வழக்கில் ஒரு கோர்ட் தீர்ப்பு வந்தது. அதில் பாதி இவர்களுக்கு அனுகூலமாகவும், பாதி எதிர்த் தரப்புக்கு அனுகூலமாகவும், விரும்பினால் அப்பீல் செய்யலாம் என்று ஜட்ஜ்மென்ட் ஆகி இருப்பதாக வக்கீலிட மிருந்து கடிதம் வந்துள்ளது. மறுநாளோ, அதற்கு மறுநாளோ நான் காரைக்குடியிலிருந்து தந்தையாரவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். தீர்ப்பு விவரம் கூறினார்கள். சற்றுப் பொறுத்து "மகாத்மா காந்தி சொன்னது தான் நடந்தது. 'நான் வழக்கை முடித்துவிட்டு வருகிறேன்.' என்று கூறிய என் வாழ்நாள் முழுவதும் முடியாது போய் விட்டது. என்னை இந்த நிலைமைக்கும் கொண்டு வந்து விட்டது. அன்று மகாத்மா, 'நீங்கள் இதிலிருந்து வெளிவந்து விட வேண்டும்' என்று கூறியதன் பொருள் இன்று தான் விளங்குகிறது. 'நீங்கள் வழக்கை விட்டாலொழிய, வழக்கு உங்களை விடாது' - என்பதையே அன்று அவர் அப்படி உணர்த்தியுள்ளார். அதன் பொருள் அப்பொழுது விளங்கவில்லை," என்று கூறிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு நானும் வேதனையில் மூழ்கினேன். தந்தையும் மகளும் அந்நிலையிலிருந்து விடுபடச் சிறிது நேரம்