பக்கம் எண் :

132கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

பிடித்தது. இவ்வாறு அனைத்தும் இழக்கும் நிலை வந்துங்கூடப் பிறருக்கு உதவும் மனத்தை மட்டும் இழக்கவில்லை.

தந்தையாரவர்கள் வறுமையின் பிடியிலிருந்த பொழுது, அவர் களின் கடைசிக் காலத்தில் "லோகோபகாரி" என்ற தேசியப் பத்திரிகையை நடத்தி வந்த திரு. பரலி. சு. நெல்லை யப்பர் அவர்களிடமிருந்து ஓர் கடிதம் வந்தது. முன்பு போலச் செல்வச் செழிப்புடன் வை.சு.ச. இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பண உதவி கேட்டு எழுதப்பட்டது அக்கடிதம். நான் காரைக்குடியி லிருந்து அந்தச் சமயம் வாரம் தவறாது தந்தையாரவர்களைக் கானாடுகாத்தான் சென்று பார்த்து வருவது வழக்கம், அப்படி ஒரு முறை சென்றிருந்த போது கடிதத்தை எடுத்துப் படிக்கும் படி கூறிவிட்டு, என்றும் தன்னம்பிக்கை, தைரியமுடன் இருந்து வந்த அவர்கள், "ஏன் இன்னும் நான் வாழ்கிறேன்," என்று ஒரு கேள்வி யைப் போட்டு நிறுத்திக் கொண்டார்கள்.

எங்களுக்கு எல்லாம் எழுதும் கடிதங்களின் கடைசியில் " எல்லாம் இனிதே முடியும்" என்று இருக்கும். அல்லது "எல்லாம் நன்மைக்கே" என்றே முடித்திருப்பார்கள்.