பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்133

21
தனவணிகரும் ஹிந்து மதாபிமான சங்கமும்

வை.சு.சண்முகம்

(குறிப்பு : தமிழறிஞர் சொ. முருகப் பனாரின் மணி விழா மலருக்காக இந்து மதாபிமான சங்கத்திற்கு வயி. சு.ச. எழுதிய கட்டுரை இது. சமூக முன்னேற்றத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு, இலக்கிய ஆர்வம், பாரதியார்பாற் கொண்ட பற்று, நாள் குறிப்பு வைத்துக் கொள்ளும் பழக்கம் முதலிய குண நலங்களை அறிய இக்கட்டுரை துணை நிற்பதைக் காணலாம்.)

நம் சங்கம் நிறுவியவர்களில் தலையாய நண்பர் சொ. முருகப்பா அவர்களின் அறுபதாண்டு நிறைவு விழாவில், அவர்கட்குச் சிறப்புச் செய்யும்பாராட்டுக் கூட்டத்தில் நம் சங்கம் தோன்றிய வரலாற்றை அனைவரும் அறிய ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

நம் அன்பர் சொ. முருகப்பா அவர்களுடன் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக நான் நட்புரிமை கொண்டிருக் கிறேன். நள வருடம் பங்குனி மாதம் க ஆம் நாள் (31.3.1917) அன்று காரைக்குடியில் நண்பர் அ. ராம. இராமனாதன் செட்டியார் அவர்கள் வீட்டில், சொ. முரு அவர்களை முதன் முதலாகக் கண்டேன்.

பொழுது போக்காக அங்கு அன்பர்கள் சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது பக்கத்திலிருந்து, அவர்களில் ஒருவருக்கு அன்பர் சொ. முரு. ஆட்டம் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.

யாசகம் பெற அங்கு வந்த புலவர் ஒருவரிடம் இரண்டு மூன்று அன்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம். அதில் சொ. முரு. வந்து கலந்து பேசியபோது அவர்கட்குத் தமிழ்ப் புலமை இருப்பது தெரிந்தது. அவர்கள் பேசிய துடுக்கான, கவர்ச்சிகர மான பேச்சு என் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர்கள் சென்ற பிறகு விசாரித்ததில் அவர் பெயர் எஸ். முருகப்பன் என்று சொன்னார்கள்.