பக்கம் எண் :

134கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

தேவகோட்டையில் அப்போது நடந்த 'வைசிய மித்திரன்' வாரப் பத்திரிகையில் எஸ். முருகப்பன் என்பவர் சில மாதங் கட்கு முன் எழுதிய கட்டுரை ஒன்று பார்த்தது நினைவுக்கு வந்தது.

"தேவை! தேவை!! மந்திரவாதிகள் தேவை!!! அறியாமை என்ற பேய் தனவணிகப் பெண்களைப் பிடித்திருப்பதால் அவர்களும் பேயாகி விட்டனர். அந்த இரு பேய்களும் தனவணிக ஆண் மக்களைப் பிடித்தாட்டி வைக்கிறது. அவைகளை விரட்டத்தக்க மந்திரவாதிகள் தேவை!" என்பது தான் அக்கட்டுரையின் சுருக்கம்.

அந்தக் கட்டுரை எழுதியவர்தான் எஸ். முருகப்பன் என்பவர் என்று தெரிந்தது. அவர்களைப் பார்க்க வேண்டு மென்று நண்பர் அ. ராம. ராம. அவர்களிடம் கூறியதும் ஆள் அனுப்பினார்கள். நண்பர் சொ. முரு. பத்தே நிமிடங்களில் அங்கு வந்தார்கள்.

"எதற்காக என்னைப் பார்க்க விரும்பினீர்கள்?" என்றார்கள். 'மந்திரவாதிகள் தேவை! அவசரத் தேவை!' என்று விளம்பரம் செய்தீர்களே! அத்தகையோரிடமிருந்து மனுக்கள் ஏதும் வந்ததா? என்றதும் "வரவில்லை. அடுத்த மகாமகத்துக்குள் வராது என்பதும் எனக்குத் தெரியும்" என்றார்கள். "வரவே மாட்டார்கள் என்பதனா லேயே அவசரத் தேவை என்று அழைப்பு விட்டீர்களோ? அப்படி யானால் அத்தகையோர் முன் வந்தாலும் அவர்களுடன் ஒத்து ழைக்கவும் நீங்கள் தயாரில்லையோ?" என்ற வினாவுக்கு, "யார் சமூகத் தொண்டு செய்ய முன்வரப் போகிறார்கள்? மகிபாலன்பட்டி மு. சின்னையா செட்டியாரும், வைசிய மித்திரன் இராமனாதன் செட்டியாரும் ஏழு எட்டு ஆண்டுகளாக எழுதி முயற்சிக் கிறார்கள் யாரும் முன் வரக் காணோமே!" என்றார்கள். "பத்திரிகையில் எழுதிவிட்டால் போதுமா? அவ்விருவரும் வெகு தொலைவில் இருக்கிறார்கள் நம் சமூகத் தொண்டு புரிய நம் பகுதிக்கு நடுநாயக மாக விளங்குகின்ற காரைக்குடியில் ஓர் சங்கம் நிறுவலாகாதா? தமிழ் மொழி வளர்ச்சி கருதி மேலைச் சிவபுரியில் சன்மார்க்க சங்கம், அன்பர் மு.கதி. அவர்கள் முயற்சியால் ஏழெட்டு ஆண்டு களாகத் தோன்றி வேலை செய்கிற மாதிரி தொண்டு புரியலாம்" என்பதற்கு "மேலைச் சிவபுரியில் வ.பழ.சா. குடும்பத்தார் பொறுப் பேற்றிருக் கிறார்கள். இங்கு யார் பொறுப்பேற்பது?" என்றார்கள். "நீங்கள் இருக்கிறீர்கள், அன்பர் அ. ராம. ராம. இருக்கிறார்கள். இங்குள்ள மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்" என்றேன்.