பக்கம் எண் :

138கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

28.10.1919 அன்று மாலை கவியரசர் கானாடுகாத்தான் வந்து சேர்ந்தார்கள். 6.11.19 அன்று எதிர் பாராத விதமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டுக் கடையம் செல்ல வேண்டும் என்றார்கள். அன்று பயணமாகக் காரைக்குடி சென்றார்கள்.

6.11.19 அன்று நம் இந்து மதாபிமான சங்கத்தின் அமைப்புக் களையும் உறுப்பினர்களின் தொண்டுகளையும் ஆர்வத்தையும் மாலை நேரில் பார்த்ததும் புனிதமான புலவரின் உள்ளம் பூரித்து விட்டது. மறுநாட் காலை அவர் செல்வதாக இருந்ததைக் கைவிட்டு விட்டார்.

நம் இந்து மதாபிமான சங்கம் மறக்க முடியாத வாழ்த்துப் பாக்களை நம் கவியரசரிடமிருந்து பெற ஓர் நல்ல வாய்ப்பாக அது அமைந்தது. இந்து மதப் பெருமை, இந்து மதாபிமான சங்கம் பெற்றிருந்த வளர்ச்சி, நம் உறுப்பினர்களின் பண்பாடு, ஊக்கம் அனைத்தையும் கண்டு அணு அளவும் பிழையில்லாத உண்மை களை ஒருங்கே கொட்டி வைத்திருக்கிற வாழ்த்துப் பாக்கள் அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் பொங்கி மலர்ந்த இளமை மணம் மாறாத பூக்களாக இன்றும் நம் உள்ளந்தோறும் மணங் கமழ்ந்து விளங்கு கின்றன.

அப்போதையத் தமிழ் நாட்டின் தவப்பயன், உள்ளத் துறவு பெற்ற சிறந்த வேதாந்தி, மாசு மறுவற்ற நாட்டன்பர், இணையற்ற தமிழ்த் தொண்டர், மனிதப் பிறவியில் உயர்வு தாழ்வு கூறுதல் ஐயத்துக்கு இடமில்லாத பாவமாகும் என்று துணிந்து கூறி அதன் படி வாழ்ந்து வழிகாட்டிய வீரர், மங்கையர் முன்னேற்றத்தில் மட்டிலா ஆர்வங் கொண்ட மகான் பாரதியார், மிடுக்குடன் வேகமாக எவர் நெஞ்சத்தையும் கொள்ளை கொள்ளும் வண்ணம் புரட்சிக் கருத்துக்களை உரைநடையும் பாடலுமாக நம்மிடையே கொட்டிவிட்டு 32 ஆண்டுகட்கு முன்பே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள்.

புனித உள்ளங்கொண்ட நம் புலவர் ஏறு பாரதியாரிடம் நம் சங்கம் பெற்ற வாழ்த்துக்கள், நமக்குத் தோன்றும் இன்னல் களைத் தடுத்து நிறுத்தி மறுமலர்ச்சி தரும் என்பது நிரூபிக்கப் பெற்ற உண்மையாக நிலவுகிறது.

நம் கவியரசர் 6.1.20 முதல் 10.1.20 வரை மறுமுறையாகக் கானாடுகாத்தான் வந்திருந்தார்கள். நம் சங்கத்தில் அக்கவிஞரின் நிழல் படம் எடுத்து அது நம்மிடம் இருக்கிற வாய்ப்பைத் தமிழ் நாடடில்