இடையே வயதுடைய கட்டிளங்காளை களான உங்கள் நல்ல எண்ணம் தொண்டு எல்லாம் நிறை வெய்தும். என்னாலான உதவிகளைச் செய்கிறேன். நான் உங்களில் ஒருவன்" என வாழ்த்தி அனுப்பினார்கள். நம் சங்க உறுப்பினருள் எண்மர் சேர்ந்து ஊழியர் சங்கம் கண்டனர். அவர்களில் எழுவரை 27.9.19 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் நிழல் படம் பிடித்தாh. "நேற்றிருந்தவர் இன்று இல்லை என்ற பெருமையை உடையது உலகு" என்று பொய்யா மொழியார் கூறுகிற பெருமைக்கு இலக்கான உறுப்பினர் பிச்சப்பா சுப்பிரமணியம் அவர்கள் ஒருவர் என்பதை நம் இந்து மதாபிமான சங்கத்தினர் ஒரு போதும் மறக்க முடியாது. அப்படத்தில் உள்ளோர் எழுவரில் அறுவர் இன்றும் நலமே வாழ்கின்றோம். 28.10.19 அன்று நம் கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கானாடுகாத்தான் வரும் வழியில் நம் நண்பர்களால் வரவேற்கப் பெற்று முதன்முதலாகக் காரைக்குடியில் காலை 10.30க்கு வந்து இறங்கினார்கள். சிவன் செயல் ஊருணித் தென் கரையில் தான் அப்போது மதுரை பஸ் வந்து நிற்கும். நம் கவியரசர் பாரதியாருடன் வந்த தோழரையும் கவியரசருடன் ஏக வசனத்தில் அவர் பேசுவதையும் கண்ட நம் அன்பர்கள் இந்து மதாபிமான சங்கத்தில் அவர்களை புகவிட இணங்கவில்லை. எனினும் அவருடன் பேச, அவர் பாடல் களை அவர் பாடுவதைக் கேட்க விரும்பியதால் என்னுடன் நம் கவிஞர் பெருமானைக் கானாடுகாத்தானுக்கு அனுப்பவும் இணங்கவில்லை. நம் கவிஞர் திலகத்தைக் காலஞ்சென்ற செ.அ. ராம. முருகப்ப செட்டியார் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் அவருடைய தோழருடன் இறக்கி னோம். அங்கேயே அவர்களின் குளியல், உணவு முடிந்தது. நம் கவிஞர் பெருமானின் அழகிய திருவடிவும், நிறமும், மீசை விரைப்பும், அன்பு கனிந்த வெடிப்புறப் பேசிய பேச்சும், உணர்ச்சி மிகுந்த - நடுங்க வைக்கும் தோற்றத்துடன் நெஞ்சில் பதியுமாறு சொற்களை வீசிய வீரமும், அசையாத தெய்வ நம்பிக்கையும், புலமையின் தெளிவும் எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்து விட்டன. தாம் இயற்றிய பாடல்களைப் பண்ணோடும் உணர்ச்சி யோடும் அவர் பாடியது கேட்டு நம் அன்பர்கள் அளவிலா மகிழ்ச்சிப் பெருக்கடைந்த பிறகு எங்களைப் புறப்பட அனுமதித்தனர். |