பக்கம் எண் :

136கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

1918 முதல் நம் குல வளர்ச்சி கருதித் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு, நம்மவர்கள் தங்கும் ஊர் நகரத்தார்க்கும் செய்கோன், சையாம், மலாயா, பர்மா, இலங்கை முதலிய நாடுகளில் உள்ள நகரத்தார்களுக்கும் அனுப்பினோம்.

செட்டிமார் நாட்டில் நடந்த திருவிழாக்களிலும் தனவணிகர் கூடும் இடங்களில் எல்லாமும் நம் சங்க உறுப்பினர்கள் சென்று குல வளர்ச்சி நாடி 96 ஊர்க் கூட்டத்தை மீண்டும் கூட்டிவிட வேண்டும் என்று பேசி வந்தனர். அவர்கள் அனைவரும் இந்து மதாபிமான சங்கத்தின் உறுப்பினர்கள் தாம்.

தமிழ்நாட்டில் சமயத்துறை, நாட்டு நலம்,மொழி வளர்ச்சி, இனப்பற்று ஆகிய வழிகளில் முயலும் நல்லோர்கள், பெரியோர்கள் அனைவரும் நமது சங்கத்தின் ஆண்டு விழாக்களிலும் இடையேயும் நம்முடன் ஒத்துழைத்ததால் நம் இந்து மதாபிமான சங்கம் பல நல்வாழ்த்துக்களைப் பெற்று விட்டது.

அக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்த பெரியோர்களில் எவருமே நம் அழைப்புக்கிணங்கி வந்து, நம்முடன் கலந்து, சங்கத்தை வளர்க்க ஒத்துழைக்கத் தவறியதே இல்லை என்று துணிவாகக் கூறலாம்.

நம் இந்து மதாபிமான சங்கம் பெற்ற நல் வளர்ச்சியின் பயனாகத் தனவணிகர்களிடையே நம் குறிக்கோள்களில் முதலாவதான சமூகத் தொண்டு புரிய மேடைகளை உண்டாக்கக் கூடிய ஆற்றலைப் பெற்று விட்டோம்.

11.9.1919 அன்று மாலை நான்கு மணிக்கு நம் சங்க நிலையத்தில் நம் இந்து மதாபிமான சங்க உறுப்பினருள் முதன்மையான சிலர் தனவைசிய ஊழியர் சங்கத்தைத் தோற்று வித்தனர். அந்த ஊழியர் சங்கம் கடுமையான நிபந்தனைகளை உடையது. அதன் திட்டங் களில் ஒன்று 'தனவைசிய ஊழியன்' என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகை நடத்த வேண்டும் என்பது. நம் சங்கத்தின் உறுப்பினர் களில் சிலர்தான் அதன் உறுப்பினர். ஊழியர் சங்கத்தின் முதல் செயலாளரும் சொ.முரு. அவர்கள்தான்.

28.9.19 அன்று தனவணிக மரபின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள தேவகோட்டை கரு. கி சொர்ணநாதன் செட்டியார் அவர்களி டத்தில் ஆலோசனை வாழ்த்துப் பெற நண்பர் சொ. முரு. காலஞ் சென்ற நம் சகோதரர் அமராவதிபுதூர் பிச்சப்பா, சுப்பிரமணியன் இருவருடன் தேவகோட்டை சென்றோம். "20க்கும் 24க்கும்