பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்23

காரைக்குடி இராம. சுப்பையா, முருகு, சுப்பிரமணியம், அரு. பெரியண்ணன், கோனாபட்டு இராமசாமி, திருப்புத் தூரைச் சேர்ந்த இமயவரம்பன், மு. நூர்முகமது (இராவணன்) முதலானோர், இன்ப மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனர்.

27.7.1943, 28.7.1943 ஆகிய இருநாளும் கூடிப் பேசினர். பேச்சின் முடிவில் 'முத்தமிழ் நிலையம்' என்னும் பெயரில் ஒரு நிறுவனம் உருவாகியது.

1944 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் முத்தமிழ் நிலையம், பாவேந்தரின் 'இசையமுது' என்னும் நூலைப் புதிய பதிப்பாக வெளியிட்டது. 'இருண்டவீடு' என்னும் நூலின் முதற் பதிப்பும் இங்கிருந்துதான் வெளியாகியது. 'கற்கண்டு' என்னும் நூலையும் வெளிக் கொணர்ந்தது.

பின்னர் பாவேந்தரின் நீண்ட நாளைய எண்ணத்தை உருவாக்கும் முயற்சியில் முத்தமிழ் நிலையம் முயலத் தொடங்கியது. ஒரே இரவில் ஒரே மேடையில் சொற்பொழிவு, இசை, நாடகம், நாட்டியம் ஆகியவை கலந்து, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் படைத்துக் காட்ட வேண்டும் என்பது கவிஞரின் ஆவல். அவ்வாவலை நிறைவேற்றும் வகையில் ' இன்ப இரவு' என்னும் பெயர் சூட்டிப் பல ஊர்களில் முத்தமிழ் நிலையம் நடத்திக் காட்டியது. மன்னர் மன்னன் எழுதிய 'கறுப்புக்குயிலின் நெருப்புக் குரல்' என்னும் நூலில் இச்செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு முத்தமிழ் நிலையத்தின் வாயிலாகப் பாவேந்தர் பாரதிதாசன் புகழ் பரவத் துணை நின்றவர் நம் சண்முகனார்.

வானொலி கேட்போர் கழகம்

தமிழ்நாட்டு வானொலியில் தமிழ்ப்பாடல்கள் குறை வாகவும் பிறமொழிப் பாடல்களே மிகுதியாகவும் கேட்டு மகிழும் வாய்ப்பைத் தமிழ் மக்கள் பெற்றிருந்தனர். ஆம்; அதனை மகிழ்ச்சியாகத்தான் உணர்ச்சியற்ற நிலையில் தமிழர்கள் கேட்டு வந்தனர்.

எனினும் இளைஞர் சிலர்க்கு எப்படியோ மானவுணர்ச்சி ஏற்பட்டு, இதற்கொரு வழிகாண முயன்றனர். வானொலிப் பெட்டி வைத்திருக்கும் செட்டி நாட்டு இளைஞர்கள் கூடி, திருச்சி, சென்னை, வானொலி நிலையங்களுக்கு மடல்கள் எழுத முற்பட்டனர். தமிழ்ப் பாடல்களே பாடப்பட வேண்டு மென்றுகூட எழுத