இவ்வாறு நாட்டு விடுதலைக்காக, தன்மான உணர்ச்சி பரவுதற் காக, சாதிவேற்றுமைகள் அகற்றப்படுவதற்காக, தமிழ்மொழி வளர்ச்சிக்காக, தமிழிசை கேட்பதற்காகப் பல்வேறு நிலைகளிற் பங்கு கொண்டு பாடுபட்டு வந்த பெருமை படைத்தவர் நம் சண்முகனார். அதுவும் தம் வாழ்க்கைத் துணைவியாருடன் பொது நலம் பேணித் தொண்டு செய்தவர். |