பக்கம் எண் :

26கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

4
யாவருங் கேளிர்

விரிந்த மனம்

பொதுவாக நகரத்தார், சாதிக் கட்டுப்பாடு மிகுதியாகக் கொண்ட வர்கள். அக்காலம் சாதிக் கட்டுப்பாடு தலைதூக்கி நின்ற காலம். அவர்களுக்குள் கூடிப் பேசிச் சில கட்டுப்பாடு களை வகுத்துக் கொள்வர். அக்கட்டுப்பாடுகளிலிருந்து அணுவளவும் பிறழ மாட்டார்கள். ஒரு வேளை பிறழ நேரிட்டால் விலக்கி வைத்து விடுவர். அவ்வளவு கட்டுக் கோப்பாக வாழும் இயல்பினர் நகரத்தார் எனப்படுவோர்.

மு.சின்னையா செட்டியார், சொ. முருகப்பனார், இராம. சுப்பையா, வயி.சு.சண்முகனார் போன்றவர்கள் முற்போக் கெண்ண முடையவர்கள் ஆதலின் சில கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டுத் தலைநிமிர்ந்திருப்பர். அதனால் அவர்கள் பெருந் தொல்லை களுக்கெல்லாம் ஆட்பட்டதும் உண்டு. அவற்றைக் கண்டு அவர்கள் அஞ்சாது நின்று, சமுதாயச் சீர்திருத்தப் பணியில் தொடர்ந்து, பணியாற்றி வந்தனர்.

இவ்வாறு சீர்திருத்தப் பணியில் பேரீடுபாடு கொண்டிருந் தமையால் நம் சண்முகனார் சாதி வேறுபாடு கருதார்; செல்வத்தால் உயர்வு தாழ்வு கருதார். கல்வி அறிவால் மேம்பட்டவன், தாழ்ந்தவன் என்றும் பாரார். யாவரேயாகினும் சரிநிகர் சமமாகக் கருதி, அனைவரும் கேளிர் எனக் கருதும் மனப்பாங்கு பெற்றிருந்தார்.

வ.வே.சு. ஐயரும் கேளிர், வடக்குப் பக்கமிகுந்த ஆதி திராவிடரும் கேளிர். செட்டி நாட்டரசரும் கேளிர்; பெட்டிக் கடையாரும் கேளிர். சர். ஆர்.கே. சண்முகனாரும் கேளிர்; சாதாரண சண்முகம் கேளிர். அப்துல்லாவும் கேளிர்; ஆனந்தராசும் கேளிர்.

இவ்வாறு அனைவரையும் கேளிராகக் கருதியமையால் அவர்கள் வாழ்க்கையையும் தம் வாழ்க்கையோடு இணைத்து, அனைத்திலும்