72 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
கஸ்தூரிபாய், தேவதாசு காந்தி, இராசகோபாலாச் சாரியார் முதலான பெருமக்களும் வந்திருந்தனர். உணவு முதல் எல்லா ஏற்பாடுகளும் இங்கேதான். செட்டி நாட்டிலுள்ள ஊர்களுக்குச் சென்று கூட்டத்திற் பேசி விட்டு, நன்கொடையாகக் கிடைத்த தொகை. ஏலத்திற் கிடைத்த தொகை, கூட்டத்தில் உண்டியல் மூலங் கிடைத்த தொகை அனைத் தையும் கொணர்ந்து, இன்ப மாளிகைக்கு வந்து தான் எண்ணுவர். காந்தியடிகள் தொடர்பால், சண்முகனார் தாம் வைத்திருந்த மேல் நாட்டுத் துணிகளையெல்லாம் எரித்து விட்டார். காந்தி யடிகள், செல்வராகிய சண்முகனாரிடம் இயல்பாகக் காணப்படும் எளிமையைக் கண்டு வியந்து பாராட்டினார். இருவரும் உரை யாடிக் கொண்டிருக்கும் பொழுது, 'ஏன் இவ்வளவு ஆடம்பரமான மாளிகையில் வாழ்கிறார்கள்?' என்று வினவினார். "இதோ நம் வீதியிலுள்ள வெள்ளையரைச் சார்ந்து வாழ்கின்ற - பெருஞ் செல்வரின் அரண்மனைக்குச் சமமாக, வெள்ளையனை எதிர்க்கும் நமக்கும் இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பு மனப் பான்மைதான் வேறொன்றுமில்லை," எனச் சண்முகனார் விடை யிறுத்தார். "இதை விட்டு விரைவில் நீங்கள் வெளி வந்தாக வேண்டும். நாட்டு மக்களுடன் சேர்ந்து தொண்டு செய்ய வேண்டும்?" - இது காந்தியடிகளின் வேண்டுகோள். "சில விவகாரங்கள் இருக்கின்றன; அவை தீர்ந்ததும் உங்கள் விருப்பம் போல் வெளியேறி விடுகிறேன்" - இது சண்முகனாரின் மறுமொழி. காந்தியடிகள் வேறொன்றும் பேசாமல், புன்முறுவல் பூத்தார். (விவகாரம் என்று குறிப்பிட்டது, தமக்கும் அவர்களின் உறவினர் களுக்கும் தொழில் சம்பந்தமாக அப்பொழுது நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு) ஆனால் அந்த விவகாரம் சண்முகனாரின் இறுதி நாள் வரை முடியவில்லை. அதனால் மனம் சிறிது நொந்த நிலையில் கடைசி நாளில் தம் மகள் பார்வதி நடராசனிடம் "ஆத்தா அன்று காந்தியடிகள், "நீங்கள் வெளி வந்து விட வேண்டும்" என்று கூறியபோது தொடர்ந்துள்ள வழக்கை முடித்தவுடன் வந்து விடுகிறேன் என நான் கூறினேன். அப்போது அவர் ஒன்றும் பதிலுரையாது |