பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்71

சீட்டாட்டம் தொடங்கியது. மும்முரமாக நடைபெற்றது. சீட்டாட்டம் ஆடும்பொழுது துப்பாக்கியை மடியின் மேல் வைத்து, அதன் மேல் ஒரு தலையணையையும் வைத்து ஆடிக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர் தலையணை மேல் கையை வைத்து அழுத்தி விட்டார். சண்முகனார் தம் மடியில் வைத்துக் கொண்டிருந்த துப்பாக்கி வெடித்து அவருடைய துடையில் குண்டு பாய்ந்து விட்டது. குருதி வழிந்து வேட்டியை நனைத்து விட்டது.

அருகிலிருந்தவர் அஞ்சி நடுங்கி விட்டனர். ஆனால் சண்முக னாரோ சிறிதும் அஞ்சினாரல்லர். "சத்தமிடாமல் என்னுடன் வாருங்கள்" என்று கூறி விட்டார். தோழர்கள் துணையுடன் தமது மகிழுந்தில் மருத்துவமனைக்குச் சென்று, அறுவை செய்து, குண்டை எடுத்துவிட்டு, மருந்திட்டுக் கொண்டு, கட்டுடன் வீடு திரும்பினார்.

கட்டுடன் கண்ட வீட்டார், 'ஆ' என்ன இது '-' என்று அலறி விட்டனர்.

'ஒன்றுமில்லை; துடையில் கட்டியொன்று புறப்பட் டிருந்தது. அதை ஆபரேசன் செய்து கொண்டேன்' என்று அமைதியாக மறுமொழி தந்தார்.

அச்சமின்மை

பிறிதொரு சமயம் பங்காளி வீட்டுத் திருமணத்திற்காக உறவினரு டன் இராயவரத்திற்குச் சென்றிருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்து திரும்பும் பொழுது இருட்டி விட்டது. மண வீட்டார் தடுத்தும் இவர் கேட்கவில்லை. மாட்டு வண்டிகளில் வந்து கொண்டிருந் தனர். இரவு 11 மணி.

நடுவழியில் திருடர் சிலர், வண்டியை வழிமறித்தனர். பெண்கள் அஞ்சி நடுங்கிக் கூக்குரலிட்டனர். சண்முகனார் சிறிதும் அஞ்சில ராகிக் கைத்துப்பாக்கியை யெடுத்து வானை நோக்கிச் சுட்டு விட்டு, 'உயிர் பிழைக்க வேண்டுமானால் ஓடி விடுங்கள்; இல்லை யென்றால் தீர்த்துவிடுவேன்' என்றார். திருடர்கள் மூலைக்கொருவராக ஓடி விட்டனர்.

எதையும் தாங்கும் இதயம்

1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் செட்டி நாட்டிற்கு வந்திருந்த பொழுது இன்பமாளிகையில் தான் தங்கியிருந்தார். அவருடன்