பக்கம் எண் :

74கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

நான் சிலையாகி விட்டேன். எனினும் என் நெஞ்சத் துடிப்பு நிற்கவில்லை. அத்துடிப்பு ஒவ்வொன்றும் 'இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன், ஒன்னார் விழையும் சிறப்பு?' என்று நிறுத்தி நிறுத்தி ஒலித்துக் கொண்டிருந்தது.

கலங்கா நெஞ்சம்

ஒரு முறை இன்பமாளிகையின் மாடியின் ஒரு புறத்தே தீ பற்றிக் கொண்டது. அதனையறிந்ததும் வடக்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த ஆதி திராவிட மக்கள், 'நம்ம ஐயா வீட்டிலே தீப்பிடித்து, விட்டதே!' என்று அலறிக் கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். உடன் காரைக்குடியிலிருந்து நெருப்பு அணைக்கும் படையினரும் வந்து மறுபுறம் பரவாமல் தடுத்து விட்டனர். ஆதி திராவிட மக்களுக்குச் சண்முகனார், ஆண்டு தோறும் கதராடைகள் வழங்குவதுண்டு. அதனால் - நன்றிப் பெருக்கால் ஓடோடி வந்து அணைத்து உதவினர். இம்மக்கள் விரைந்து வந்து அணைக்காதிருந்தால் படையினர் வந்து சேரும் முன்பாக முழுவதும் நெருப்புப் பரவி இருக்கும்.

வீட்டில் நெருப்புப் பற்றிய செய்தி, சிங்கப்பூரிலிருந்த சண்முக னார்க்குத் தந்தி வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. 'தமிழ்முரசு' ஆசிரியரும் உரிமையாளருமான சாரங்க பாணி தலைமையில் நிகழ்ந்த கூட்டத்தில் மேடையில் சொற்பொழிவு ஆற்றிக் கொண் டிருந்த சண்முகனாரிடம் தந்தி கொடுக்கப் பட்டது. அதை வாங்கிப் படித்து விட்டுச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். கூட்டம் முடிந்தபின் சாரங்க பாணியிடம் தந்தியைக் கொடுத்தார். அவர் படித்து விட்டுச் சண்முகனார் அமைதியைக் கண்டு வியந்தார். இவ்வாறு எத்தகு நிலையிலும் சண்முகனார் பதற மாட்டார்; கலங்க மாட்டார்.

நேர்மையுள்ளம்

நகரத்தார் மரபில் பெண்ணுக்குச் சீதனப் பணம் கொடுப்பது வழக்கம். அப்பணத்தைப் பிறரிடமோ கணவரிடமோ கொடுத்து வைப்பது வழக்கம். அது வட்டியுடன் வளர்ந்து கொண்டிருக்கும். அவ்வழக்கப் படி, சண்முகனார் கடையில் சீதனப்பணம் கொடுத்து வைக்கப்பட்டது.

இப்பொழுது 'நொடிப்பு' ஏற்பட்ட சமயம். வழக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குடியிருக்கும் வீடும் போய் விடுமோ? என