பக்கம் எண் :

76கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

9
வாழ்க வயி.சு. சண்முகனார்

கவிஞர் பழ. மு. முத்தழகப்பர்

(வை.சு.ச. தலைமையில் தனவணிக இளைஞர் சங்கத்திற் சேர்ந்து சமுதாயப் பணியாற்றும் பேறு பெற்றவர் பழ. மு. முத்தழகப்பர். ஐயாவின் இயல்புகளை நேரிற் கண்டறிந்தவரா தலின் தம் மனத்தி லிருப்பதைக் கவிதையாக்கிப் படம் பிடித்துக் காட்டுகிறார்.)

1.தனவணிக வாலிபர்கள் சங்கத்தின்
    தலைவரவர் தலைமை யின்கீழ்
மனமினிக்கப் பணிபுரிந்தோம் இளைஞரெலாம்
    அந்நாளை மறக்க வில்லை
தினமணியாய்க் கடமையிலும், செந்தமிழாய்
    இனிமையிலும் திகழ்ந்த வீரன்
மனமறிந்து செயல்புரிந்து வளமிகுந்த
    வாழ்வுபெற வழிமேற் கொள்வோம்.

2.பாரதியார் தமைத்தேடிப் பரிசளித்துப்
    பாட்டுவளம் பரவச் செய்தார்
பாரதியின் தாசனார் நாமக்கல்
    பாவலராம் புலவர் தம்மைச்
சீராட்டிப் பாராட்டித் தென்சீதக்
    காதியெனத் திகழ்ந்த சீமான்
நீரூட்டி உரமூட்டித் தமிழ்ப்பயிரை
    எந்நாளும் நிமிரச் செய்தார்.

3.அடுத்தவர்க்கு நிழலாவார் அன்னையினும்
    தயவுடையார் ஆண்மை யாளர்
மிடுக்கான தோற்றத்தார் கதராடை
    மேனியினார் அன்பு தோய்ந்த