பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்87

திரு வை.சு. அவர்களின் முதல் மனைவி கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்த போது, தாயாய், மருத்துவராய், செவிலியாய் திரு. வை.சு. ஆற்றிய தொண்டு மிக அரியது. நாட்டுத் தொண்டைப் போலவே, வீட்டுக் கடமைகளிலும் தவறாதிருந் தார்கள்.

இம்மலரைத் தொகுக்கும் கவியரசர் முடியரசனார் அவர்களும், திருமதி பார்வதி தேவி அவர்களும், மிக அரிய, அற்புதமான காரியத்தைச் செய்கின்றனர். திரு வை.சு. அவர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதோடு, அவரைப் போல அஞ்சா நெஞ்சுடன் வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும்.