பக்கம் எண் :

132மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

சோழிய ஏனாதி திருக்குட்டுவன்1

குட்டுவன் என்னும் பெயர் இவன் சேரர் குடியைச் சேர்ந்தவன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அதனை வலியுறுத்தும் சான்றாக அவனைப் பாடிய புலவர், அவனது தந்தை வஞ்சி நகரத்தவன் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சேரர் குடியினன் என்பது தெளிவு.

இவன் நாடு

இவன் வெண்குடை என்னும் ஊரில் இருந்துகொண்டு அரசாண்டு வந்தான். அந்த ஊர் வயல்கள் நிறைந்த ஊர். இவன் தந்தை வஞ்சி நகரத்தவன்.

தோற்றம்

மார்பிலே சந்தனம், தோளிலே வில், வலிமைமிக்க கைகளில் கூர்மையான வாள். இந்தக் கோலத்துடன் இவன் காட்சியளித்தான்.

கொடைத் தன்மை

குமரனார் என்னும் புலவர் மதுரையில் வாழ்ந்தவர். அவரது தந்தை கோனாட்டு எறிச்சலூரில் வாழ்ந்த மாடலன். இந்தக் குமரனார் இந்தக் குட்டுவனை வள்ளல் என்று பலரும் புகழ்வதைக் கேட்டிருந்தார். வெண்குடை நகருக்குச் சென்று இந்தக் குட்டுவனின் தந்தை நகரான வஞ்சியைச் சிறப்பித்துப் பாடினார். கேட்ட இந்தக் குட்டுவன் பெரிதும் மகிழ்ந்து கொல்லும் போர் யானை ஒன்றைப் பரிசிலாக வழங்கினான். புலவர் யானையைக் கண்டு அஞ்சி ஒதுங்கினார். புலவர் பரிசில் சிறியது என்று எண்ணி ஒதுங்கினார் என்று எண்ணினான். முன்பு அளித்ததைக் காட்டிலும் மிகப் பெரிய மற்றுமொரு யானையைப் பரிசிலாக அளித்தான். இதனால், புலவர் நடுநடுங்கிப்போய் அவனிடம் பரிசில் கேட்பதையே நிறுத்திவிட்டாராம்.

இவ்வாறு அவனது கொடைத் தன்மை அமைந்திருந்தது.

ஏனாதிப் பட்டம்

‘ஏனாதி’ என்னும் பட்டம் படைத்தலைமை பூண்டு சிறப்புடன் போராடியவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பட்டம். வேளாண்மையில்


1. ௸ 394