பக்கம் எண் :

134மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

3. சேர அரசப் புலவர்கள்

பிற புலவர்களால் பாடப்பெற்றுள்ள சேர அரசர்கள் வரலாற்றை இதுவரை கண்டோம். இவர்களே அன்றித் தாம் பாடிய பாடல்களால் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ள சேர அரசர்களும் உண்டு.

1. கருவூர்ச் சேரமான் சாத்தன்

2. சேரமான் இளங்குட்டுவன்

3. சேரமான் எந்தை

4. சேரமான் கணைக்கால் இரும்பொறை

5. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

6. பாலைபாடிய பெருங்கடுங்கோ

7. மருதம் பாடிய இளங்கடுங்கோ

8. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

‘சேரமான்’ என்னும் சொல் சேரர் குடிமகன் என்னும் பொருளைத் தரும். இது சேரர் குடியினர் அனைவர்க்கும் உரியது. சேரர் குடி, சேர நாட்டை அரசாண்ட குடி; சேர நாட்டுக் குடிமக்கள் அன்று.

சேரர் குடியைச் சேர்ந்த அரசன் ஒருவனின் மகன் எத்தனை பேர் இருந்தாலும், அத்தனை பேரும் ஆங்காங்கே சிறு பகுதிக்கேனும் அரசர்களாக விளங்கிய நிலைமையை அவர்களது வரலாற்றில் நாம் காண்கின்றோம். எனவே, சேரமான் என்னும் அடைமொழி பெற்றுள்ள அனைவரும் ஒரு சிறு பகுதிக்கேனும் அரசர்களாக விளங்கினார்கள் என்று கொள்வது பொருத்தமானது. இந்த வகையில் பிறரால் பாடப்படாவிட்டாலும் தாம் பாடல்கள் பாடிச் சங்கப் பாடல்களில் இடம் பெற்ற புலவர்கள் - ‘சேரமான்’ என்னும் அடைமொழியுடன் சங்கநூல்களைத் தொகுத்தோரால் குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் - சேர அரசர்கள் என்றே கொள்ளத்தகும்.

மற்றும் பாலைபாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ ஆகிய பெயர்களில் ‘கோ’ என்னும் சொல் அவர்கள்