பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 135 |
அரசர்களே என்பதை உணர்த்துகின்றன. ‘முடங்கிக் கிடந்த நெடுஞ் சேரலாதன்’ என்னும் பெயரில் ‘சேரல்’ என்னும் குடிப் பெயர், இவன் அரசன் என்பதை உணர்த்துகிறது. அந்துவன் என்னும் பெயர், பெயர் ஒப்புமையால் தோன்றக்கூடிய உய்த்துணர்வு. கருவூர்ச் சேரமான் சாத்தனார்1 காதலன் யாமத்தில் வந்திருக்கிறான்; வெளியில் காத்திருக் கிறான். தோழி அவனுக்குக் கேட்கும்படி காதலியிடம் கூறுகிறாள். ‘வா என்றும் சொல்ல முடியவில்லை. போ என்றும் சொல்ல முடியவில்லை. என்ன செய்வோம்?’ என்பது அவளது கூற்று. இந்தக் கருத்தமைந்த பாடலை அவன் பாடியுள்ளான். சேரமான் இளங்குட்டுவன்2 காதலி காதலனுடன் சென்றுவிட்டாள்; தாய் தந்தையருக்குத் தெரியாமல் சென்றுவிட்டாள். செய்தி அறிந்த செவிலித் தாய் அவளை வளர்த்த தாய்க்கு வருந்திக் கூறுகிறாள். தான் ஆயத்தாரோடு பந்தடிக்கும்போதே கன்றும் அவளது காலடிகள், வெயில் காயும் காட்டில் எப்படி நடந்து சென்றனவோ என்பது அவளது ஏக்கம். இந்தக் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான். சேரமான் எந்தை3 காதலன் தன்னை விட்டுவிட்டுச் செல்கிறான் என்று கவலைப் படுகிறாள் காதலி; கண்ணீர் வடிக்கிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள். இந்தக் கண்ணீரோடு உன்னை விட்டுவிட்டு யார் செல்வார்; மராமரம் வேனில் காலத்தில் பூத்திருக்கும் தேமூர் போன்ற அழகி நீ. உன்னையும் உடன்கொண்டு செல்வார் என்பது அவளது ஆறுதல் மொழி. இந்தக் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான். நாடு தலைவியின் அழகைத் தேமூர் என்னும் ஊரின் அழகோடு ஒப்பிட்டு இவன் பாடியுள்ளான். எனவே, தேமூரில் தங்கி இவன் ஆட்சி புரிந்து வந்தான் எனலாம்.
1. குறுந். 268 2. அகம்.153 3. குறுந். 22 |