பக்கம் எண் :

162மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

மகனான நெடுமான் அஞ்சியுடன் பெருஞ் சேரல் இரும்பொறை போர் செய்து தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். அஞ்சிக்கு உதவியாகச் சோழனும் பாண்டியனும் இருந்தனர். தகடூர்ப் போரில் கடைசியாக வெற்றி பெற்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை.

பல்வேற் றானை யதிக மானோடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசுங் குடையும் கலனுங் கொண்டு
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத்
துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத்
தகடூர் எறிந்து நொச்சிதந் தெய்திய
அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறை

என்று இவனை எட்டாம் பத்துப் பதிகம் கூறுகிறது.

இவனை 8ஆம் பத்துப் பாடியவர் அரிசில்கிழார். இப்பத்தைப் பாடியதற்குப் பரிசிலாக இவர் இவனுக்கு அமைச்சராக அமர்ந்தார் “பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் (அரசனும் அரசியும்) புறம்போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டில் (சிம்மாசனம்) கொடுக்க அவர் யான் இரப்ப இதனை ஆள்க வென்று அமைச்சுப்பூண்டார்.” என்று 8ஆம் பத்தின் அடிக் குறிப்புக் கூறுகிறது.

தகடூரை வென்ற பிறகு இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை என்று பெயர் பெற்றான். தகடூர்ப் போரைப் பற்றித் `தகடூர் யாத்திரை’ என்னும் ஒரு நூல் இயற்றப்பட்டது. அந்நூல் இப்போது மறைந்துவிட்டது. அந்நூலின் சில செய்யுட் களைத் தொல்காப்பியப் புறத் திணையியலின் உரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டி யுள்ளார். புறத்திரட்டிலும் சில செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை புலவர்களிடத்தில் பெருமதிப்புக்கொண்டு அவர்களைப் போற்றினான். இவனுடைய முரசு வைக்கும் கட்டிலிலிருந்த முரசைக் கழுவுவதற்குக் கொண்டு போயிருந் தார்கள். அவ்வமயம் மோசிகீரனார் என்னும் புலவர், அது முரசு கட்டில் என்பதை அறியாமல் அதன்மேல் படுத்து உறங்கிவிட்டார். முரசுகட்டில் சிம்மாசனம் போன்று மதிப்புக்குரியது. அதில் யாரும் அமர்வதும் படுப்பதும் கூடாது. மோசிகீரனார் அதில் படுத்து உறங்குவதைக் கண்ட