| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 171 |
செங்குட்டுவனுடைய இந்த மோகூர்ப் போர் வெற்றியை 5ஆம் பத்தில் பரணர் பாடுகிறார்: நுண்கொடி யுழிஞை வெல்போர் அறுகை சேணன் ஆயினும் கேள்என மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்கு அரண்கள் தாவுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்தவன் வேம்புமுதல் தடிந்து முரசுசெய முரற்சிக் களிறுபல பூட்டி ஒழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி (5 ஆம் பத்து. 4 : 10-17) என்றும், வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉநிலை அதிர மண்டி ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... படுபிணம் பிறக்கப் பாழ்பல செய்து படுகண் முரசம் நடுவட் சிலைப்ப வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் கருஞ்சினை விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவன் (5ஆம் பத்து, 9 : 7-17) என்றும், பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் முரரை முழுமுதல் துமியப் பண்ணி வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டி (5ஆம் பத்து, பதிகம். 13-17) என்றும் இப்போர்ச் செய்தி கூறப்படுகிறது. |