பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்181

இளஞ்சேரல் இரும்பொறையைப் பதிற்றுப்பத்து 9ஆம் பத்தில் பாடினவர் பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர். இப்புலவர் இவ்வரசனிடம் பரிசு பெறச் சென்றார். ஆனால், இவன் பரிசு கொடுக்கக் காலந் தாழ்த்தினான். அதனால் அவர் மனம் வருந்திப் பாடினார். இப்பாடல்களில் அவருடைய வறுமைத் துன்பம் நன்கு புலப்படுகிறது. (புறம். 210, 211) பரிசு கொடுக்கக் காலந்தாழ்த்திய இளஞ்சேரல் இரும்பொறை, இப்புலவர் அறியாமல் இவருக்கு வீடும் மனையும் ஊரும் அமைத்துப் பிறகு அவற்றைக் கொடுத்தான். `அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்படவகுத்துக்’ கொடுத்தான் என்று பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்தின் கீழ்க்குறிப்புக் கூறுகிறது.

பிறகு பெருங்குன்றூர்கிழார் இவ்வரசன் மேல் 9ஆம் பத்துப் பாடினார். இதற்குப் பரிசாக `மருளிலார்க்கு மருளக்கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரங் காணம்’ (காணம்-பொற் காசு) கொடுத்தான்.

இளஞ்சேரல் இரும்பொறை சென்னியர் பெருமான் (சோழன்) ஒருவனை வென்றான்.

நன்மரந் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே          (9ஆம் பத்து. 5)

இதற்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் இதனை இவ்வாறு விளக்குகிறார்: `இளஞ்சேர லிரும்பொறை சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச்சென்னியர் பெருமானை எம்முன்னே பிடித்துக் கொண்டு வந்து தம்மினெனத் தம் படைத் தலைவரை ஏவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவன் நாடுகாண் நெடுவரையின் நாள் மகிழிருக்கைக் கண்ணே தன்முன் திணைமுதல்வரைப் போல அரசவை பணிய அறம்புரிந்து