| 188 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
என்னும் அரசனின் நண்பனாகவும் இருந்தான். எனவே, இவை யெல்லாம் செங்குட்டுவன் தமிழகத்தின் பேரரசனாக இருந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன அல்லவா? செங்குட்டுவன் வாழ்க்கை செங்ட்குடுவன், இளங்கோ வெண்மாள் என்னும் அரசியைத் திருமணஞ் செய்திருந்தான். (சிலம்பு - காட்சி. 5) அவளுக்கு வேண்மாள் என்றும் பெயர் உண்டு. `வதுவை வேண்மாள் மங்கல மடந்தை’ (சிலம்பு நடுகல் 51). இவர்களுக்குப் பிறந்த மகன் குட்டுவன் சேரல். குட்டுவன் சேரலைப் பரணருக்குச் செங்குட்டுவன் கொடுத்தான். (5ஆம் பத்துப் பதிகம்). கல்வி கற்பிப்பதற்காகக் கொடுத்தான் போலும். செங்குட்டுவன் வாழ்ந்த அரண்மனை ‘இலவந்தி வெள்ளி மாடம்’ என்று பெயர் பெற்றிருந்தது. விளங்கில வந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளி (சிலம்பு, காட்சி 4-5) வஞ்சிமா நகரத்துக்கு வெளியே கடற்கரைக்கு அருகில் ‘வேளாவிக் கோ மாளிகை’ என்னும் அரண்மனை இருந்தது. பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துக் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளாவிக்கோ மாளிகை (சிலம்பு. நடுகல்: 196 - 198) என்பதனால் இதையறியலாம். வேனிற்காலத்தில் செங்குட்டுவன் அரண்மனையில் வசிப்பது இல்லை. பேராற்றங்கரை யோரத்தில் இருந்த மரச்சோலைகளில் கூடாரம் அமைத்து அதில் சுற்றத்தோடு தங்கியிருப்பது வழக்கம். இச்செய்தியைப் பரணர் இவனைப் பாடிய 5ஆம் பத்துச் செய்யுளில் கூறுகிறார். நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவிற் பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை |