274 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
அவர்கள் தேர்ப்படையைச் செலுத்திக் கொண்டு வந்தார்கள் என்று மேலே காட்டிய செய்யுள்களால் அறிகிறோம். இதுபற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ந்து பற்பல கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் எழுதி வெளியிட்ட கருத்துகளையெல்லாம் இங்கு நாம் ஆராய முற்படவில்லை. ஆனால், அவர்கள் எழுதிய கட்டுரைகளை மட்டும் இங்குக் குறிப்பிடுவது அமைவுடைத்து. அவையாவன: 1. S. Krishnaswamy Aiyangar, ‘Mauryan Invasion of South India,’ Ch, II, The Beginnings of South Indian History, 1918. 2. Somasundara Desikar, ‘The Mauryan Invasion of Tamilakam’, Quartely Journal of the Mythic Society, Vol. xviii, pp. 155-166. 3. K.A. Nilakantan, ‘The Mauryan Invasion of the Tamil Land’, quartely Journal of the Mythic Society, Vol. xvi, p. 304. 4. P.T. Srinivasa Iyengar, History of the Tamils, pp. 520-526. 5. Somasundara Desikar, ‘The Mauryan Invasaion of the Tamilakam’, Indian Historical Quarterly. Vol. iv. pp. 135-145. 6. V.R. Ramachandra Dikshitar, The Mauryan Polity, pp. 58-61. 7. K.G. Sankar, ‘The Moriyas of the Sangam Works’, J.R.A.S., 1924, pp. 664-667. 8. Vincent A. Smith, Early History of India, 4th Edition 1957, p. 157. 9. The Cambridge History of India, Vol. i, p. 596. 10. K.A. Nilakanta Sastri (Edited), ‘Mauryan Invasion of South India’, A Comprehensive History of India, Vol. ii, 1957, pp. 501-503. 11. டாக்டர் கே.கே. பிள்ளை, ‘தமிழகமும் மோரியர் படை யெடுப்பும்’, பேராசிரியர் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை வெள்ளி விழா மலர், 1961, பக்கம். 359-363. 12. பண்டித, மு, இராகவையங்கார், சேரன் செங்குட்டுவன். மோரியர் மோகூரின்மேல் படையெடுத்து வந்தனர் என்று கூறப் படுகின்றனர். ஆனால், பாண்டி நாட்டு மோகூருக்கு இடையில் எந்த மலையும் வழிமறித்து நிற்கவில்லை. சேரன் செங்குட்டுவன் மோகூர் பழையன் மேல் படையெடுத்து வந்து அவனை வென்றபோது, அவன் மலையில் வழியுண்டாக்கிக் கொண்டு வந்ததாகத் தெரிய வில்லை. அதே மோகூரின்மேல் மோரியர் படையெடுத்து வந்தபோது மலை |