பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 273 |
விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறையிறந்து அவரோ சென்றனர். (அகம் 281 : 7-12) என்றும் மாமூலனார் இச்செய்தியைக் கூறுகின்றார். வென்வேல் விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக விடைகழி யறைவாய். (புறம் 175 : 5-8) என்று கள்ளில் ஆத்திரையனார் இதனைக் கூறுகிறார். விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர் ஆயினும்... (அகம் 69 : 10-12) என்று உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார் கூறுகிறார். மோரியர் என்பவர் இந்தியச் சரித்திரத்தில் பேர் பெற்ற மௌரிய அரசராவர். மோரிய அரசர்களில் சந்திரகுப்த அரசனும் அசோகச் சக்ரவர்த்தியும் பேர் பெற்றவர்கள். மோரிய வம்சம் கி.மு. 185இல் சிறப்புக் குன்றிவிட்டது. ஆனால், அவர்கள் வழியில் வந்தவர் சில நூற்றாண்டுகள் வரையில் ஆங்காங்கே சிற்சில இடங்களில் இருந்து சிற்றரசராய் ஆட்சி செய்து கொண்டிருந் தார்கள். அந்த மோரியர்களில் ஒரு கிளை ஆந்திர தேசத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தில் மாங்கி என்னும் சுவர்ண கிரியில் அரசாண்டனர். இவர்கள் கோசரின் வேண்டுகோளின் படி மோகூரின்மேல் படையெடுத்துவந்தனர் போலும். இச்செய்தியைத் தான் மேலே காட்டிய சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. மோகூர் பாண்டி நாட்டில் இருந்த ஊர். அது இப்போதும் திருமோகூர் என்னும் பெயர் பெற்று இருக்கின்றது. மோகூரை யரசாண்ட மன்னர் பழையன்மாறன் என்னும் குடிப்பெயர் பெற்றுப் பாண்டியனுடைய சேனாபதியாக இருந்தார்கள். மோகூர் மன்னனாகிய ஒரு பழையன் மாறனைச் சேரன் செங்குட்டுவன் வென்ற செய்தியை முன்னமே கூறினோம். மோகூரின்மேல் மோரியர் படையெடுத்து வந்தபோது மலைகள் குறுக்கிட்டபடியால் அம்மலை மேல் பாதை அமைத்துக் கொண்டு |