பக்கம் எண் :

272மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

பழைய வஞ்சி நகரத்தின் பெயரையே பெற்று இருந்தது என்பதும், ஒரே காலத்தில் இரண்டு வஞ்சிக்கருவூர்கள் சேர இராச்சியத்தில் இருந்தன என்பதும் தெரிகின்றன.

இந்தக் கொங்கு நாட்டு வஞ்சிக்கருவூரைத்தான் டாலமி உள்நாட்டுப் பட்டினம் என்று கூறினார் எனத் தெரிகிறது. இக்கருவூர் கொங்கு நாட்டைச் சேர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் புதிய அமைப்பில் நாட்டை ஜில்லாக்களாகப் பிரித்தபோது, கொங்கு நாட்டைச் சேர்ந்த இவ்வூர் திருச்சிராப்பள்ளி ஜில்லா வுடன் சேர்க்கப்பட்டது. கரூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட கரூர் மாவட்டம் (ஜில்லா), தனியாகத் திருச்சி மாவட்டத்திலிருந்து தற்போது பிரிக்கப்பட்டுள்ளது. - பொதுப் பதிப்பாசிரியர்கள்.

மோரியர் மோகூருக்கு வந்தனரா?

கோசருக்கு மோகூர் பணியாதபடியினாலே அவரைப் பணியச் செய்வதற்குச் கோசர், மோரியருடைய உதவியை நாடினார்கள் என்றும் அவர்களின் வேண்டுகோட்படி மோரியர் மோகூரின் மேல் படையெடுத்துச் சென்றார்கள் என்றும் செல்லும் வழியில் மலைகள் குறுக்கிட்டபடியால், மலைமேல் தேர்ப்படை போவதற்காக வழிகளை உண்டாக்கிக்கொண்டு போனார்கள் என்றும் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன.

வெல்கொடித்
துனைகா லன்ன புனைதேர்க் கோசர்
தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த
இலங்குவெள் ளருவிய அறைவா யும்பர்.          (அகம். 251 : 6-14)

என்றும்,

கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கணை
முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு