பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 271 |
கொங்குநாட்டுச் சேரஅரச மரபில் ஒரு சேரன் ஆட்சிசெய்யத் தொடங்கினான். அவன் கொங்குநாட்டில் தான் இருந்த ஊருக்குப் பழைய தலைநகரத்தின் பெயராகிய வஞ்சி (கருவூர்) என்னும் பெயர் சூட்டினான். எனவே, பழைய, வஞ்சிமா நகரமும் புதிய வஞ்சிமா நகரமும் சேரஅரசர்களுக்குத் தலைநகரங்களாகச் சங்க காலத்திலேயே அமைந்தன. சேர மன்னன் செங்குட்டுவனை 5ஆம் பத்துப் பாடிய பரணர் 10ஆவது செய்யுளில், வளங்கெழு சிறப்பின் உலகம் புரைஇச் செங்குணக் கொழுகும் கலுழிமலிர் நிறைக் காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை. என்று புகழ்கிறார். இதில் கொங்கு நாட்டிலே பாய்கிற காவிரியாறும் அதனுடன் கலக்கிற ஆன்பொருநை, குடவனாறு ஆகிய மூன்று ஆறுகள் ஒன்று சேருகிற முக்கூடலுக்குச் செங்குட்டுவனை உவமை கூறுகிறார். இந்த மூன்று கூறுகளும் பாய்கிற இடம் சேரனுக்கு உரியதாக இருந்தபடியினாலே இந்த ஆறுகளை அவனுக்கு உவமை கூறினார் என்பது தெளிவு. புறநானூறு 13ஆம் செய்யுளை உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியிருக்கிறார். அச்செய்யுளின் அடிக்குறிப்பு, `சோழன் முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு, சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை யோடு வேண்மாடத்து மேலிருந்து பாடியது’ என்று கூறுகிறது. இந்தக் கருவூர் கொங்கு நாட்டுக் கருவூர் என்பது திட்டமாகத் தெரிகின்றது. ஏனென்றால், சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி தன் யானை மேல் ஏறித் தன் சோழ நாட்டு எல்லைக் கருகில் வந்தபோது, அவன் ஏறியிருந்த யானை கருவூரில் போனதை இச்செய்யுள் கூறுகிறது. ஆகவே, சோழ நாட்டுக்கு அருகில் இருந்த கருவூர், கொங்கு நாட்டுக் கருவூர் என்பதில் ஐயமில்லை. இக் கருவூரில் வேண்மாடம் என்னும் அரண்மனையில் சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை இருந்தான் என்பதனால், இக்கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்துகொண்டு சேர அரசர்களின் ஒரு கிளையினராகிய இரும்பொறையரசர் ஆட்சி செய்தார்கள் என்பது தெரிகின்றது. இந்த அந்துவஞ்சேரல் இரும்பொறை, செங்குட்டுவனுடைய தாயாதிப் பாட்டன் எனத் தெரிகிறான். எனவே, கொங்கு நாட்டின் தலைநகரமும் |