270 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
வகையில், சேரன் செட்டுவனுடைய காலம் தமிழிலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம். வஞ்சிமாநகரம் (கருவூர்) சேர நாட்டின் தலைநகரமாக இருந்தது வஞ்சிமாநகரம். அதற்குக் கருவூர் என்றும் வேறு பெயர் இருந்தது. கருவூர் வஞ்சி மாநகர் எங்கிருந்தது என்பது பற்றி இருவேறு கருத்துக்கள் ஏற்பட்டு அறிஞர்கள் பலரின் வாதப் பிரதிவாதங்களுக்குக் காரணமாயிற்று. சேர நாட்டின் கடற்கரையோரத்தில் ஒரு வஞ்சிக் கருவூரும் கொங்கு நாட்டில் ஒரு வஞ்சிக் கருவூரும் இருந்தன. இந்த இரண்டு கருவூர்களில் எது சேரர்களின் தலைநகரமாயிருந்தது என்பது பற்றித்தான் மேலே கூறப்பட்ட விவாதங்கள் எழுந்தன. இது பற்றிப் பல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. நானும் இது பற்றிச் சொந்த முறையில் ஆராய்ந்து பெரியாற்றங்கரையில் சேரநாட்டுக் கடற்கரை யோரத்தில் இருந்த வஞ்சிக்கருவூர்தான் சேரநாட்டின் பழைய தலைநகரம் என்னும் கருத்துள்ளவனாக இருந்தேன். ஆனால், அந்தக் கருத்தை உறுதிப் படுத்தாதபடி, டாலமி எனும் யவன ஆசிரியரின் குறிப்பு தடைசெய்து கொண்டிருந்தது. டாலமி தம்முடைய நூலிலே கரவ்ர (Karoura), அதாவது கருவூர் உள் நாட்டிலிருந்த நகரம் என்று எழுதியிருக்கிறார். இந்தக் காரணத்தினால் என்னுடைய கருத்தை உறுதிப்படுத்த முடியாமல் ஐயங் கொண்டிருந்தேன். கொங்கு நாட்டு வஞ்சிமா நகரந்தான் சேரர்களுடைய தலைநகரம் என்று கூறுகிற, திரு. ரா. இராக வையங்காரின் `வஞ்சிமாநகர்’ என்னும் நூலும், திரு. மு. இராகவை யங்கார் எழுதிய `சேரன் செங்குட்டுவன்’ என்னும் நூலும் வஞ்சி மாநகரத்தைப் பற்றித் தெளிவாகக் கூறாமல் குழப்பம் கொடுப்பதாக இருக்கின்றன. சங்க காலச் சேர மன்னர்களைப் பற்றி ஆராய்ந்த போதுதான் வஞ்சிமா நகரத்தைப் பற்றிய உண்மையான கருத்து எனக்குப் புலனாயிற்று. சங்க காலத்துச் சேரர் தலைநகரம் ஆதிகாலம் முதல் கடற்கரை யோரத்திலிருந்த வஞ்சிக்கருவூர்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், சேர அரசர்கள், முக்கியமாக இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆகிய அண்ணன் தம்பி யரசர்கள் கொங்கு நாட்டின் தென்பகுதிகளைக் கைப்பற்றி அவற்றைச் சேர இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டார்கள். சேர்த்துக்கொண்ட |