பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 269 |
பதிற்றுப்பத்து, செங்குட்டுவனுடைய பாட்டன், தந்தை, சிறியதந்தை, தாயாதித் தந்தை, தமயன், தாயாதித்தமயன், தம்பியர் ஆகியவர்கள்மீது பாடப்பட்டது. 5ஆம் பத்து இச்செங்குட்டுவன்மேல் பாடப் பட்டது. இது அக்காலத்தில் புதுவகையான இலக்கியப் படைப்பு. ஒவ்வொரு அரசன் மேலும் பத்துப்பத்துச் செய்யுளைக் கொண்ட புது இலக்கியம் இது. செங்குட்டுவன் காலத்திலே நீண்ட செய்யுள்களும் புதுமை யாக இயற்றப்பட்டன. சோழன் கரிகால் வளவன் மீது பாடப் பட்ட பட்டினப் பாலையும் பொருநர் ஆற்றுப்படையும் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடப்பட்ட பெரும் பாணாற்றுப்படையும், ஆரிய வரசன் பிரகதத் தனுக்கு அகப்பொருள் அறிவித்ததற்காகப் பாடப்பட்ட குறிஞ்சிப் பாட்டும் செங்குட்டு வன் காலத்துப் புதுவகையான நெடும்பாடல்கள். (இவனுக்கு அடுத்த தலைமுறையில் பாடப்பட்டவை. சிறுபாணாற்றுப் படை, திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை) முல்லைப்பாட்டு என்பவை) இவற்றுக்கெல்லாம் மேலாக செங்குட்டுவன் காலத்தில் இயற்றப் பட்ட புதுமையான இலக்கியங்கள் இரண்டு. அவை, செங்குட்டுவனின் தம்பியரான இளங்கோஅடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும், இவனுடைய நண்பரான கூலவாணிகன் சாத்தனார் இயற்றிய மணி மேகலையும் ஆகும். இவ்விரண்டு காவியங்களைப் பற்றி வேறு இடத்தில் கூறியுள்ளோம். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காவியங்கள். அதாவது ஒன்றோடொன்று தொடர்புடைய காவியங்கள் இவ்விரண்டு காவியங்களும் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியா தேசத்துக்கே சிறப்பான காவியங்கள் ஆகும். ஏனென்றால், இந்தியாவில் உள்ள எல்லா மொழிக் காவியங்களும் பாரத, இராமாயணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆனால், இவ்விரண்டு காவியங்களும் வரலாற்று நிகழ்ச்சியை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்ட காவியங்கள், இந்த வகையில் இந்தியாவிலுள்ள எல்லா மொழிக் காவியங்களுக்கும் முதலில் தோன்றிய காவியங்கள் இவை என்பதில் ஐயமில்லை. சங்க காலத்தில் பாரதம், இராமாயணம் ஆகிய நூல்களும் தமிழில் இயற்றப்பட்டிருந் தன என்று கூறப்படுகின்றன. அந்த பாரத, இராமாயண நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. அவைகளின் சில செய்யுள்கள் மட்டும் உரை யாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆனால், முழு உருவத்தில் இப்போது கிடைக்கிற பழைய காவிய நூல்கள் சிலப்பதி காரமும் மணிமேகலையுமே. இந்த |