பக்கம் எண் :

 : :

2. சோழர்*

முன்னுரை

சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் அரசோச்சிய மூவேந்தராகிய சேர, சோழ, பாண்டியர்களுள், பாண்டிய அரசர்களுடைய வரலாறு மிகுதியாகவும் தெளிவாகவும் கிடைக்காததாலும், மிகுதியாகவும் தெளி வாகவும் கிடைக்கும் சேர அரசர்களுடைய வரலாற்றுக்கு அடிப் படையாக உள்ள பதிற்றுப்பத்து என்னும் நூல் ஒருவரால் பாடப் பெற்றிருக்குமோ என்று ஐயுறக் கிடக்கும் நிலை சிலரிடையே இருந்து வருவதாலும், ஓரளவு தெளிவான வரலாற்றுடன் கரிகாலன் முதலான பேரரசர்களது வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள சோழர் வரலாறு ஒருவகையில் முக்கியத் துவம் பெற்றதாகும். சோழநாட்டைப் பற்றி அறிவதற்குத் தக்க சான்று களாகச் சோழர் காலத்திய தொல் கதைகளும், சங்ககால இலக்கியங் களும், அயல்நாட்டுக் குறிப்புகளும், கல் வெட்டுகளும் இன்றைய அகழ்வாராய்ச்சிகளும் பெரிதும் நமக்குத் துணைபுரிகின்றன.

‘சோழநாடு’ என்னும் பகுதியில், சோழநாட்டின் நிலவியல் அமைப்பு, எல்லைகள், முக்கிய ஆறுகள், பட்டினங்கள், மக்களினங்கள், அரசர்களின் வழிமுறைகள், போர்கள், ஆட்சிமுறை முதலானவற்றைக் காணலாம்.

சோழநாடு

எல்லைகள்

சோழநாடு தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருந்தது. கிழக்குக் கடல் இக்காலத்தில் வங்காளக் குடாக் கடல் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்தக் கடல் சங்க காலத்தில் குணகடல் (குணக்கு - கிழக்கு) என்று பெயர் பெற்றிருந்தது. கடைச்சங்க காலத்தின் இறுதியில் கி. பி. முதலாம் நூற்றாண்டு. இரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழகத்


* தமிழ்நாட்டு வரலாறு: சங்க காலம் - அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.

1. யவனர், அரபுநாட்டுக்கு மேற்கிலுள்ள செங்கடலையும் அதற்கு இப்பால் உள்ள பாரசீகக் கடலையும் அதற்கப்பால் உள்ள அரபிக்கடலையும், குமரிக் கடலையும், குண கடலையும் செங்கடல் (எரித்திரையக் கடல்) என்று கூறினார்கள்.