பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்301

நெய்தலங்கானல்

இது சோழநாட்டில் காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் தென்வடலாகக் கடற்கரை ஓரத்தில் இருந்த நீண்ட கடற்கரைப் பகுதி ஆகும். இங்கு இளஞ்செட்சென்னி என்னும் சோழன் இருந்தான். ஆகையால், அவன் ‘சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி’ என்று கூறப்பட்டான். நெய்தலங்கானலில் உப்பளங்கள் இருந்தன.20 பரதவர் (மீன் பிடிப்போர்) இருந்த குப்பங்களும் இருந்தன. நெய்தலங் கானல், பிற்காலத்தில் சோழ மண்டலக் கரை என்று பெயர் பெற்றிருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் ‘கும்பினி’ யார் இதைக் ‘கொரமாண்டல் கோஸ்ட்’21 என்று கூறினார்கள்.

குராப்பள்ளி

இவ்வூரில் குராப்பள்ளி என்று பெயர்பெற்ற சோழர் அரண் மனை இருந்ததாகத் தெரிகிறது. கிள்ளிவளவன் என்னும் சோழன் இங்கு இறந்துபோனான். ஆகவே அவன் ‘குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்’ என்னும் பெயர் பெற்றான்.22

கழார்

சோழநாட்டில் காவிரிக்கரையில் இருந்த கழார் என்ற ஊருக்கு23 மத்தி என்பவன் தலைவனாக இருந்தான்.24 ‘மத்தி’, பரதவர் (நெய்தல் நிலத்து மக்கள்) கோமான்.25 காவிரியில் நீர்ப்பெருக்கு வரும்போது கழார்ப் பெருந்துறையில் நீராட்டுவிழா நடந்தது.26 அந்த நீராட்டுவிழா


20. மணிமே. 24 : 27

21. Coramandal Coast

22. தஞ்சை மாவட்டம் திருவிடைக்கழி என்னும் ஊரை அடுத்துள்ள திருக்களாச் சேரி என்பது திருக்குராச்சேரி என்பதன் திரிபு வழக்கு என்பது கோயிலில் தலவிருட்சம் குராமரமாக இருப்பதனால் உய்த்துணரக் கிடக்கிறது. (செந் தமிழ்ச் செல்வி 40, பக். 13, 79) ‘துஞ்சிய’ என்பதற்கு ஓய்வு எடுத்துக் கொண்ட என்னும் ஒரு பொருளும் உண்டு.

23. நற். 281 : 3

24. அகம். 6 : 20

25. ௸ 226 : 7 - 8

26. ௸ 222 : 5