பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்303

சாய்க்காடு

இக்காலத்தில் இது திருச்சாய்க்காடு என்று கூறப்படுகிறது. இதற்குச் சாயாவனம் என்னும் பெயரும் உண்டு. ‘நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானம்’ என்றும்30 ‘செந்நெலஞ் செறுவின் அன்னந் துஞ்சும், பூக்கெழு படப்பைச் சாய்க்காடு’ என்றும்31 இது சிறப்பிக்கப் பட்டுள்ளது.

வல்லம்

இது சோழநாட்டிலிருந்த ஊர். இவ்வூர் கோட்டை மதிலினால் சூழப்பட்டு, மதிலுக்கு வெளிப்புறத்தில் மிளைக்காடுகளால் அரண் செய்யப்பட்டிருந்தது. வல்லத்துக் கோட்டையை ஆரியப் படை தாக்கிப் போர் செய்தது. அப்போது வல்லத்து வீரர்கள் அவர்களைத் தாக்கி னார்கள். தாக்குதலுக்கு எதிர்நிற்க முடியாமல் ஆரியப்படை சிதறி ஓடிப்போயிற்று.32 வல்லத்தின் தலைவனாக இருந்தவன் சோழர் குலத்தைச் சேர்ந்த நல்லடி என்பவன்.

வெண்ணி

இவ்வூர் இக்காலத்தில் கோயில்வெண்ணி என்று கூறப்படுகிறது. இது, தஞ்சாவூருக்குக் கிழக்கே இருபத்து நான்கு கி. மீ. தொலைவில் இருக்கிறது. இந்த ஊரில் சில போர்கள் நடந்துள்ளன. பாண்டியனும் சேரனும் பதினோரு வேள் அரசரோடு வந்து போர் செய்தபோது, கரிகாற்சோழன் அவர்களை வென்றான்.33 கரிகாற் சோழனுடைய இந்த வெற்றியைப் பாடிய வெண்ணிக்குயத்தியார் இந்த ஊரிலிருந்த புலவர்.

சோழர் குடியின் தொன்மை

இலக்கியச் சான்று

பன்னெடுங் காலமாகத் தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்து வந்தனர். ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்’ என்று


30. அகம். 220 : 18

31. நற். 73 : 8 - 9

32. அகம். 336 : 22 - 23

33. ௸ 55 : 10 - 11 : புறம். 66 : 3-4;

பொருநர். 143 - 148