| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 307 |
சுகந்தன் அந்த மகனையும், மகனென்று கருதாமல் வாளால் வெட்டி விட்டான் என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது.10 சிபிச் சோழன் (செம்பியன்) சிபிச் சோழன் அரசாண்ட காலத்தில் ஒரு நாள் வல்லூறு என்னும் பறவை ஒன்று தீனிக்காகப் பறந்து அலைந்தது. அப்போது அது ஒரு புறாவைக் கண்டு அதை அடித்துத் தின்று பசியாற எண்ணி, அப் புறாவின்மேல் பாய்ந்தது. உயிர்தப்பிப் பிழைக்க அந்தப் புறா, தனக்குப் புகலிடம் கிடைக்காமல் சிபிச் சோழனிடம் வந்து அடைக்கலம் புகுந்தது. வல்லூறும் அவனிடம் வந்து தன்னிடம் புறாவைக் கொடுக்கும்படி கேட்டது. சிபி அதற்கு இணங்காமல் புறாவின் எடைக்குச் சமமாகத் தன்னுடைய உடம்பிலிருந்து தசையை அறுத்துக் கொடுப்பதாகக் கூறினான். அவன் தராசு கொண்டு வரச்சொல்லி, அதில் ஒரு தட்டில் புறாவை வைத்து, மற்றொரு தட்டில் தன்னுடைய உடம்பிலிருந்து தசையை அறுத்து வைத்து நிறுத்தான்; ஆனால், புறாவின் எடை அதிகமாக இருந்த படியால், தானே தராசில் அமர்ந்தான். அப்போது தராசு சம எடையாக இருந்தது. உடனே தெய்வம் தோன்றி அவனுக்கு வரங்கள் கொடுத்து, அவனுடைய உடம்பை முன்பு இருந்தது போலச் செய்ததாம். இந்தக் கதை புத்த ஜாதகக் கதையில், சிபி ஜாதகத்தில் கூறப்படுகிறது. அதே கதை, இந்தச் சிபிச் சக்கரவர்த்தியைப் பற்றியும் கூறுகிறது. சங்க காலத்துப் புலவர்களும் இந்தக் கதையைக் கூறியுள்ளனர்.11 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையார், அவன் சிபிச் சோழனுடைய பரம்பரையில் வந்தவன் என்று கூறுகிறார். இந்தச் சோழனைப் பாடிய கோவூர்கிழாரும் இவ்வாறே கூறுகிறார்.12 இவன் செம்பியன் என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறான். சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானைப் பாடிய தாமப்பல் கண்ணனார், அந்தச் சோழன் சிபிச் சோழனுடைய பரம்பரையில் வந்தவன் என்று கூறுகிறார்.13 சிலப்பதிகாரமும் சிபிச் சோழன்
10. ௸ 22 : 146 - 158 11. புறம். 37 : 5 - 6, 39 : 1-3, 43 : 5-7 12. ௸ 46 : 1 - 2 13. ௸ 43 : 4 - 8 |