பக்கம் எண் :

308மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

கதையைக் கூறுகிறது.14 மேலும், சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையிலும் (51 - 52), கட்டுரை காதையிலும் (55) வரந்தருகாதை (அம்மானை வரி)யிலும் இந்தக் கதை கூறப்படுகிறது.

முசுகுந்தன்

தேவலோகத்தில் இந்திரனுக்கும் அவுணர்க்கும் போர் நடந்ததாம். அந்தக் கடும்போரிலே சோழன் முசுகுந்தன் தேவலோகத்துக்குப் போய் இந்திரன் சார்பாக அவுணரோடு போர் செய்து வெற்றி பெற்றானாம். மகிழ்ச்சியடைந்த இந்திரன், ‘உமக்கு வேண்டும் வரத்தைக் கேள்’ என்று கூற, தனக்குப் போரில் உதவி செய்த பூதத்தைத் தன்னுடைய சோழநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்று முசுகுந்தன் விரும்பிக் கேட்டனாம். இந்திரனும் அந்தப் பூதத்தை அனுப்ப, சோழன் அந்தப் பூதத்தைக் காவிரிப்பூம்பட்டினத்தில் நகர்க் காவலுக்காக இருக்கச் செய்தானாம். அந்தப் பூதம் இருந்த இடம் பூத சதுக்கம் என்று பெயர் பெற்றிருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதற்கு உரையையும் விளக்கத்தையும் அடியார்க்கு நல்லார் தருகிறார். மிக்க வேகத்தினையுடைய அசுரர் கூட்டமாக வந்து நெருங்கி இந்திரனது நகரைக் காத்த புலிபோன்ற வலிமையுடைய முசுகுந்தனுக்குத் தோற்றுப் பின்பு தம்மில் ஒத்துக்கூடி அம் முசுகுந்தனது நெஞ்சமும் இருள்கூரும்படி செலுத்திய அத்திரத்தைப் போக்கிய பெரிய பூதத்தை அவ்வண்ணல் பொருட்டு இந்திரனேவலால் போந்து அப் புகாரிலிருந்து அது பலியுண்ணும் நாளங்காடியிடம் தங்கியது.15

‘என் சொல்லியவாறோ வெனின், அங்ஙனம் விட்ட அம்பு கண்ணையும் மனத்தையும் புதைத்தலாற் போர்த்தொழிலொழிந்து நின்ற முசுகுந்தற்கு அவ்விருளுடைதற்குக் காரணமானதோர் மந்திரத்தை யருள அதனால் வஞ்சங்கடிந்த அவுணரைக் கொன்றுகுவித்து நின்றானைக் கண்ட இந்திரன், அவரை எங்ஙனம் வென்றுகுவித்தா யென்றாற்கு இவன் இப் பூதத்தின் செயலெனக் கேட்ட இந்திரன். அப் பூதத்தை அவன்பொருட்டு மெய்க் காவலாக ஏவுதலின் ஆங்கு நின்றும் போந்து ஈங்குப் புகாரினுள் ளிருந்து பலியுண்ணும் நாளங்காடி யிடம்16 தங்கியது. மணிமேகலைக் காப்பியமும் இந்த முசுகுந்தனைக் கூறுகிறது.17


14. சிலப். 27 : 166 - 169 16. ௸ : 29, அம்மானை வரி 1

15. சிலப். 5 : 65 - 67; 6 : 7 - 13 17. மணிமே. 1 : 4; 19 - 20